Home

Showing posts with label வக்கிரம். Show all posts
Showing posts with label வக்கிரம். Show all posts

Monday, 23 December 2024

வக்கிரம் - சிறுகதை

 

“சந்தத் தோப்புக்கு எப்படி போவணும்?’’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ள் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது அது. புதுசாகப் பார்க்கிற வெளியூர்க்காரன் ‘‘ஆயிரம் மாடுங்கள கொண்டாந்து கட்டலாம்பலக்குதே” என்று மூக்கில் விரல் வைத்து விடுவான். அவ்வளவு விஸ்தாரம். அவ்வளவு மரங்கள். தோப்பைச் சுற்றிச் சின்னச் சின்ன ஒற்றையடிப் பாதைகள் நீள்கின்றன. ஒரு பாதை சின்னபாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகிறது. பாண்டிச்சேரிக்குக்கூட குறுக்குப்பாதை ஓடுகிறது. நிலா உச்சியில் இருக்கும்போது மாடுகள் ஓட்டிக்கொண்டு கிளம்பினால் விடியவிடிய பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேரமுடியும். தோப்பின் முகம் சாலையைப் பார்த்தபடி இருக்கிறது. தோப்பின் இடதுகைப்பக்கத்தில் ஆறாம் நெம்பர் சாராயக்கடை.