”வணக்கம். வாங்கவாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி சார். இதோ இப்ப முடிஞ்சிடும். அதுக்கப்பறமா ரூம பார்க்கலாம். ஒரு பத்து நிமிஷம் அப்படி ஃபேன் கீழ காத்தாட உக்காருங்க. நல்ல வெயில்ல வந்துருக்கிங்க. வேர்த்துவேர்த்து ஊத்துதே” என்று சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்திவரும் என்ற நம்பிக்கை பாலகுருவின் மனத்தில் பிறந்தது. ஆனால் எப்படி அந்த எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. அவனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது.