ஒரு காலகட்டம் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. நல்லதோ, கெட்டதோ, அவையே நம் தினசரி நடவடிக்கைகளையும் கருத்துகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. இந்த உலகம் தட்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் நின்று வெளிச்சத்தையும் இருட்டையும் வழங்குகின்றன. இப்படி ஏராளமான நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன.