Home

Showing posts with label என் கனவின் கதை. Show all posts
Showing posts with label என் கனவின் கதை. Show all posts

Monday, 20 January 2025

மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக வாழ்வதும்

 

ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள் இன்னும் என் நினைவலைகளில் மிதந்தபடி இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாகப் பெருக்கும் வகையில் இப்போது கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கதைத்தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இளம் வாசகர்வட்டத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் தம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பலவகைகளில் உதவியிருப்பதற்கு இதுபோன்ற தொகுதியே நல்ல எடுத்துக்காட்டு.