சொற்களை அறியத் தொடங்கிய குழந்தைப்பருவத்தில் வீட்டுக்கு வெளியே என் மகன் பார்த்த
முதல் உயிர் காக்கை. அப்போது ஒரு மாடியறையில்
வாடகைக்குக் குடியிருந்தோம். பக்கத்திலேயே
இருந்த தோப்பிலிருந்து நீளும் மரக்கிளைகள் எங்கள் வீடுவரைக்கும் நீண்டு திரும்பிச்
செல்லும். எல்லா நேரங்களிலும் அதன்மீது ஒன்றிரண்டு
காக்கைகள் காணப்படும். அதைப் பார்த்ததுமே ஏதோ
அதிசயத்தைப் பார்த்ததுபோல குதித்தோடி வந்து அழைத்துச் சென்று காட்டினான். அதன் பெயர்
காக்கை என்று சொல்லிக் கொடுத்தோம். அன்றிலிருந்து
காக்கை கண்ணில் பட்ட கணத்திலிருந்தே காகா என்று அவன் குதிக்கத் தொடங்கிவிடுவான்.