வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப்பயணம்’ புத்தகத்தைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. இன்று, இரண்டாம் உலகப்போர் என்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுத்தகவல். ஆனால் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கோ உயிர்ப்பிரச்சினை. ஜப்பானிய போர்விமானங்கள் ரங்கூன் நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியபோது, அங்கே வாழ்ந்துவந்த ஏராளமான தமிழர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நகரத்தைவிட்டு உடனடியாக வெளியேறி பதுங்கு குழிகளில் வாசம் செய்தனர். பிறகு அகதிகளாக அங்கிருந்து தப்பினார்கள். ஆங்கில ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் விமானம் வழியாகவும் கப்பல் வழியாகவும் வெளியேற, எந்தத் தொடர்புமற்றவர்கள் நடந்தே வெளியேறினார்கள். கடுமையான குளிரில் காட்டுப்பகுதி வழியாக இரண்டு மாதம் பயணம் செய்து கல்கத்தாவுக்குள் நுழைந்தனர். அகதியோடு அகதியாக பர்மாவிலிருந்து வெளியேறியவர்களில்
வெ.சாமிநாதசர்மாவின் குடும்பமும் ஒன்று. தம் சொந்த வாழ்வனுபவத்தையே அவர் நூலாக எழுதியுள்ளார்.
Showing posts with label சாமிநாத சர்மா. Show all posts
Showing posts with label சாமிநாத சர்மா. Show all posts
Friday, 15 March 2019
Saturday, 2 December 2017
கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி
உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட
அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை
ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள்
அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா”
என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு,
தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன்.
கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும்
இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள்
என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட
அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட
ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக்
கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)