Home

Showing posts with label தாகூர். Show all posts
Showing posts with label தாகூர். Show all posts

Sunday, 12 May 2024

தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

  

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான்.  பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால் சுதந்திரமாகத் திரியலாம் என்றும் வீட்டுச்சிறையிலிருந்து விடுபடலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் நினைப்பதுபோல பள்ளிவாழ்க்கை  அந்த அளவுக்கு இன்பமாக இருக்காது என்று பலர் அவனிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. அழுது மன்றாடியதால் அவனுடைய தந்தையார் அவனை  பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

Friday, 12 November 2021

நினைவுகளும் கனவுகளும்

      1974இல் பள்ளியிறுதி வகுப்பில் நான் படித்தபோது எங்களுடைய ஆங்கிலப் பாடத்தில் தாகூரின் கீதாஞ்சலி இடம்பெற்றிருந்தது. எங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்த ராமனாதன் ஐயா அந்தப் பிரார்த்தனைப் பாட்டின் முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே உருகிவிட்டார். ஒவ்வொரு சொல்லையும் அவரே சொந்தமாகச் சொல்லி முறையிட்டு மன்றாடுவதுபோல சொன்னார். இரண்டே இரண்டு பத்திகள்தான் எங்களுக்குப் பாடமாக இருந்தன. ஆனால் அப்பாடலை ஒவ்வொரு வரியாக அதை அவர் ஒரு வாரம் முழுதும் நடத்தினார். அப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் எங்கள் நெஞ்சில் பதிந்துவிட்டது.

Sunday, 8 August 2021

காகா காலேல்கர் : மாபெரும் நாடோடி

17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களை அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, ஐயா என உறவுச்சொற்கள் வழியாக அழைப்பதையும் உரையாடுவதையும் கண்டு மகிழ்ந்தார். சார், மேடம் போன்ற மேற்கத்தியச் சொற்களைவிட இத்தகு உறவுச்சொற்கள் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவில் இயல்பான வகையில் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். அவரே தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட வழிமுறை அது. அன்று மாலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அதையொட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்.