எண்பதுகளின்
இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வீக் எண்ட் என்னும் தலைப்பில் வார இணைப்பொன்றை
வெளியிட்டு வந்தது. தினமணியின் சார்பில் வெளிவந்துகொண்டிருந்த ’தமிழ்மணி’ போல, தமிழலக்கியத்தைப்பற்றிய
தகவல்களையும் ஒரு தமிழ்ச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டதாக அந்த வாராந்திர
இணைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பொறுப்பாசிரியராக இருந்த விஸ்வநாதன் என்பவர்
’வீக் எண்ட் விஸ்வநாதன்’ என்று அடைமொழியோடு அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாக இருந்தார்.