பெங்களூர்க்கு மாற்றலாகிப் போகிறேன் என்றதும் ‘அவசியமா எம்.ஜி.ரோட்டப் போய்ப் பாரு’ என்றான் சினேகிதன். ‘என்னடா விசேஷம்?’ என்றதற்கு ‘பாத்தா நீயே புரிஞ்சிக்குவ’ என்றான். சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான் என்று வந்தபிறகு புரிந்தது.

கட்டைவண்டி போனால்கூட அதன் சத்தத்தைத் தெளிவாய் உணரமுடிகிற அளவுக்குப் பஞ்சாயத்து போர்டு தெருபக்கம்தான் என்றாலும் சத்தமும் காட்டாமல் ஒரு கோழி இறகுமாதிரி வந்து லாரி நின்றிருக்குமே எனச் சந்தேகப்பட்டாள் தேவானை. சந்தேகம் வலுக்க வலுக்க படபடப்பும் அதிகமானது. வாசலுக்கு வந்து பார்த்தாள். லாரி வந்து எதுவும் நிற்கிற மாதிரி தெரியவில்லை. நேற்று மத்தியானமே வந்து சேர்ந்த கேரளா லாரிதான் பதுமை மாதிரி நின்றிருந்தது.