நாம் இப்போ என்ன செய்யலாம்?
ரவிசுப்பிரமணியன்
ரெண்டு மாமாங்கமாய்
நண்பர் பாவண்ணனை நான் நேரிலும் அறிவேன். அவர் அதே இலக்கிய இளமை மாறாது இன்றும்
இருக்கிறார் என்பதற்கு இந்த சிறுகதைத் தொகுப்பும் கட்டியம் கூறி வந்து நிற்கிறது.
பாவண்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பது அவரோடு நெருங்கி பழகிய வெகு சிலருக்கே தெரியும். தன் கதைகளையே பல எழுத்தாளர்களுக்கு விவரணையாக சொல்லத் தெரியாது. ஆனால் பாவண்ணன் பல எழுத்தாளர்களின் கதைகளை அவ்வளவு ஞாபகமாகவும் எழுதியவரே யோசித்திராத பல உப பிரதிகளோடும் சுவாரஸ்யமாகவும் காட்சிப் பூர்வமாகவும் சொல்லி நம் கண்முன் நிறுத்திவிடுவார்.