Home

Showing posts with label லட்சுமி அம்மாள். Show all posts
Showing posts with label லட்சுமி அம்மாள். Show all posts

Monday, 27 July 2020

அருங்கூத்து - கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்



சமீபத்தில் நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில் யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில் குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும் இக்கலைவிழா நடைபெறும் தருணத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு தாய்மண்ணுக்குத் திரும்பி வருகிறார்கள். அரிதாரம் பூசி, சலங்கை கட்டிக்கொண்டு யட்சகானம் ஆடுகிறார்கள். ஒருவார விழா முடிந்ததும் கனடாவுக்குத் திரும்பி வருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக யட்சகானம் ஆடிவரும் அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின் நேர்காணலும் வெளியிடப்பட்டிருந்தது. யட்சகானத்தின்மீது தனக்கு உருவான நாட்டத்தைப்பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டோடு விடையளித்திருந்தார் அவர்.