கவிதையுலகில் புறவுலகக் காட்சிகளைச் சித்தரிப்பது என்பது அழகான கலை. நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிற செடிகள், கொடிகள், மரங்கள், பாலங்கள், ஆறுகள் என எந்தப் புள்ளியிலிருந்தும் ஒரு கவிதையைத் தொடங்கலாம். அது ஒரு படைப்பாளியின் தேர்வு. ஆனால் அந்தப் புள்ளியை அவன் கவிதைக்குள் முன்வைக்கும்போது, அந்தத் தேர்வு எந்த அளவுக்குச் சரியானது என்பதை நிறுவியிருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.