கோட்டையில் பதவிப் பிரமாணவிழாவாம். தொழிலாளர்களின் கோரிக்கையை மதித்து பகல் பொழுது வேலையை ரத்து செய்திருந்தது கம்பெனி.
மதியச்சாப்பாட்டை வேண்டுமென்றே இரண்டு மைல் தள்ளி இருக்கிற ஓட்டலுக்கு நடந்துபோய் முடித்தேன். உச்சிப்பொழுதில் கூட குளுகுளுவென்று காற்றடிக்கிற நகரம் இது. மனசில் பொங்கும் எரிச்சல் தணியத்தணிய வீசுகிற காற்றை என்ன செய்வது. எரிந்துகொண்டே இருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் போய் உட்காரலாமா என்று தோன்றியது.