Home

Showing posts with label எந்தையும் தாயும். Show all posts
Showing posts with label எந்தையும் தாயும். Show all posts

Sunday, 22 February 2026

ஒரு மகளின் நினைவோடை

 

கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையை தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பலவேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாக தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம்வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

Sunday, 8 August 2021

இரண்டு கடமைகள் - புத்தக அறிமுகக்கட்டுரை

 

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்தி பிரச்சார சபையின் வெள்ளி விழாவுக்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் பழனி முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதற்காகவும் 22.01.1946 அன்று காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தார். சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் மதுரைக்கும் பழனிக்கும் சென்றார். அந்தப் பயணத்தில் ரயில் நின்ற எல்லா நிலையங்களிலும் அவரைக் காண்பதற்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். சில நிலையங்களில் அவர் பொதுமக்களைப் பார்த்து ஒருசில நிமிடங்கள் உரையாற்றினார். சில நிலையங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டியைவிட்டு வெளியே வந்து நின்று கைகுவித்து வணங்கியபடி நின்றுவிட்டுச் சென்றார்.