Home

Showing posts with label கஸ்தூர்பா. Show all posts
Showing posts with label கஸ்தூர்பா. Show all posts

Monday, 13 December 2021

நித்யா - சிறுகதை

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு

வைத்துக்கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள்

கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து

பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த

நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என்

மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த

இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம். சிறுவர்களும்

சிறுமிகளுமாக இருநூற்றுசொச்சம் பிள்ளைகள் தங்கியிருக்கும்

இல்லத்தில் சில பெயர்களை அடையாளங்களுடன்

சொல்லக்கூடிய அளவுக்குக்கூட எனக்கு இன்னும் ஞாபகம்

உள்ளது. பெயர் மறந்திருந்தாலும் சில முகங்கள் மட்டும்

நினைத்த கணத்தில் ஆழ்மனத்திலிருந்து மிதந்து தெரிகிற

அளவுக்குப் பதிந்திருக்கின்றன. என்றாலும் நித்யாவைப்பற்றி

நேரிடையாகத் தெரிந்து கொள்ளும் வரை அவள் பெயர்மட்டும்

எப்படியோ எங்கள் மனங்களில் பதியாமல் நழுவிப்போய்

விட்டது. அதை நினைக்கும்போது சற்றே கூச்சம் படர்வதைத்

தவிர்க்க முடியவில்லை.

Tuesday, 10 December 2019

செளந்திரம் அம்மாள் - சத்தியத்தின் ஆட்சி - கட்டுரை



1921ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மனைவி இலட்சுமி அம்மையாரின் தலைமையில் இயங்கி வந்த இந்து மாதர் சபைஇராட்டையில் நூல்நூற்கும் பணிகளிலும் கதர் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. ஒருநாள் அந்த அமைப்பில் நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் இலட்சுமி அம்மையாரின் பணிகளைப் பாராட்டிய காந்தியடிகள்தேச சேவைக்காக உங்கள் குடும்பத்தின் சார்பில் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.  மறுகணமே இலட்சுமி அம்மையார் எனக்கு எட்டுக் குழந்தைகள். அவர்களில் என் மகளை தேசப்பணிக்காக வழங்குகிறேன்என்று தயக்கமின்றி பதில் சொன்னார். அதைக் கேட்டு புன்னகையுடன் அவருக்கும் அவருடைய மகளுக்கும் ஆசிகளை வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார் காந்தியடிகள். காந்தியடிகளின் ஆசிகளைப் பெற்ற அந்த இளம்பெண்ணின் பெயர் செளந்திரம். பிற்காலத்தில் அம்மா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

Wednesday, 13 November 2019

கே.சுவாமிநாதன் - எப்போதும் இருக்கும் பெயர் - கட்டுரை



1915 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூர்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தியர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவது அவருடைய நோக்கமாக இருந்தது. அவரை இந்தியன் ரிவ்யுபத்திரிகையின் ஆசிரியரான ஜி..நடேசன் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்று தம் வீட்டிலேயே விருந்தினராகத் தங்கவைத்திருந்தார். ஆர்வத்துடன் அவரைக் காண்பதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் ரயில்நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.

Wednesday, 5 June 2019

கஸ்தூர்பா - ஒரு நினைவுத்தொகுப்பு






ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக பூனாவுக்குச் சென்றிருந்தேன். அசோக்குமார், காமராஜ், நான் மூவரும் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சென்ற இடம் ஆகாகான் மாளிகை. ’வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அந்த வளாகத்துக்குள் நடந்தோம். காந்தியடிகள் இருந்த அறைக்குள் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கிருந்த ராட்டையின் முன்னால் காந்தியடிகள் அமர்ந்து நூல் நூற்பதைப்போல ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அவர் சுவாசித்த காற்றின் மிச்சத்தை நான் சுவாசிப்பதாக அக்கணம் தோன்றியது. என் உடல் சிலிர்த்தடங்கியது.