Home

Showing posts with label தேநீர் பதிப்பகம். Show all posts
Showing posts with label தேநீர் பதிப்பகம். Show all posts

Sunday, 15 February 2026

மாபெரும் அனுபவம்

தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத்  திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும் பழக்கத்துக்கும் எல்லாத் திசைகளும் சொந்தமானவையே. எந்தத் திசையிலிருந்து வேண்டுமானாலும் யார் வழியாக வேண்டுமானாலும் உருவாகி ஒட்டிக்கொள்ளும். கவிதாவின் பயணமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

Saturday, 13 December 2025

கவித்துவமான முடிவு

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வடிவத்தில் எழுதிவருகிறார்கள். அவ்வரிசையில் சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி போன்றோர் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள்.

Saturday, 8 February 2025

நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு

இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இம்மருத்துவ முறைக்கு பொதுமக்களின் பேச்சுவழக்கில் ஆங்கில மருத்துவம் என்ற பெயர் உருவாகி, அதுவே நிலைத்துவிட்டது.

Wednesday, 4 December 2024

சிறுபத்திரிகையின் சாட்சி

தமிழிலக்கியத்தில் நவீனத்துவம் அழுத்தமாக வேரூன்றியதில் தமிழில் தோன்றிய சிறுபத்திரிகை மரபு ஆற்றிய பங்கு முக்கியமானது.  தொடக்க காலத்தில் செய்திகளுக்கான ஊடகமாகவும் விளம்பரங்களுக்கான களங்களாகவும் உருவான பத்திரிகைகள், கொஞ்சம் கொஞ்சமாக தம் வாசகர்களின்  வளையத்தை பெரிதாக்கிக்கொள்ளும் பொருட்டும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டும் பொழுதுபோக்குக்கூறுகளையும் தம் உள்ளடக்கங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளத் தொடங்கின. இலக்கியப்படைப்புகளும் அதன் ஒரு பகுதியாக இடம்பெறத் தொடங்கின.  ஒரு புதிய ஊடகம் ஒரு சமூகத்தில் தன்னை நிலைக்கவைத்துக்கொள்ளும் பயணத்தில், இது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடாகும்.  இப்படித்தான் தமிழ்ச்சூழலிலும் நிகழ்ந்தது. 

Sunday, 10 November 2024

Sunday, 21 July 2024

ஆற்றாமையும் வேதனையும்

கடலைக் களவாடுபவள் என்னும் தலைப்பில் அமைந்த புதிய கவிதைத் தொகுதிக்கான தன் முன்னுரையை சுஜாதா செல்வராஜ் தன் அன்னையைப்பற்றிய ஒரு நினைவுக்குறிப்போடு தொடங்குகிறார். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் அந்தக் காலத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டவர் அவர். பெரிய குடும்பம் என்னும்போது பெரிய பெரிய பிரச்சினைகளும் இருந்திருக்கக்கூடும். அவருக்கும் பிறர் மீது சிற்சில சமயங்களில் கோபம் உருவாகியிருக்கக்கூடும். ஆனால் அந்த அன்னை யாரோடும் மோதி தன் இடத்தை நிறுவிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. யார்மீதும் கசப்பைக் கொட்டவில்லை. மாறாக, தினந்தோறும் அழுக்குத்துணிகளைத் துவைக்க உட்காரும் தருணங்களில் தன் நெஞ்சிலிருக்கும் ஆற்றாமைகளையும் கோபத்தையும் வருத்தத்தையும் சத்தமாகச் சொல்லிக்கொண்டே துணிகளைத் துவைகல் மீது ஓங்கி அடித்து அடித்துத் துவைத்து கரைத்துக்கொள்வதை ஒரு கலையாக கற்றுவைத்திருந்தார். தோட்டத்து பம்ப் செட்டின் தண்ணீரில், மோட்டார் ஓடும் சத்தத்தில் தன் மனக்குமுறல்களைக் கொட்டிக் கழுவிவிட்டு லேசான மனத்துடன் வீடு திரும்பிவிடுவார்.