Home

Showing posts with label தீராநதி. Show all posts
Showing posts with label தீராநதி. Show all posts

Monday, 2 February 2026

ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை

 

காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.

Saturday, 23 September 2023

மானுட வாழ்வின் ஆழத்தைத் தேடிச் செல்லும் பெரும்பயணம் - தீராநதி நேர்காணல். சந்திப்பு : அருள்செல்வன்

 

சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்குரிய சாகித்ய அகாதெமி விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட இயல் விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ள அவருடன் ஓர் உரையாடல்.

Sunday, 27 August 2023

ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை

 காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.

Saturday, 22 April 2023

இரண்டு மரங்கள் - சிறுகதை

 ராஜாத்தி அம்மாவைப்பற்றி நான் இரண்டு காட்சித் தொகுப்புகளை உருவாக்கியிருந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாத்தி அம்மாவின் பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்திருந்த தருணத்தில்தான்இரண்டு மரங்கள்என்னும் தலைப்பில் முதல்தொகுப்பு தயாரிக்கப்பட்டது. கடந்த வாரம் பத்மஸ்ரீ  விருதை அவர் அரசாங்கத்திடமேயே திருப்பித் தந்ததையொட்டிஒரு லட்சம் மரங்கள்என்னும் தலைப்பில் இரண்டாவது தொகுப்பு தயாரிக்கப்பட்டது. காட்சிப்படுத்த எந்த விதமான வாய்ப்பும் இல்லாமலேயே இரண்டும் பெட்டிக்குள் முடங்கிவிட்டன. ஆசிய விளையாடடுப் போட்டியில் ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்ற மதுராந்தகம் தேவிகாவைப் பற்றிய காட்சித்தொகுப்பும் இறால் பண்ணைத் தடுப்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஜகன்னாதனைப் பற்றி காட்சித் தொகுப்பும் ஊடக உலகில் எனக்கென்று ஓர் நட்சத்திர அந்தஸ்தைத் தேடித் தந்தவை. அவ்வரிசையில் இந்த இரண்டு தொகுப்புகளும் இணைத்து கவனிக்கத்தக்கவை. துரதிருஷ்டவசமாக காலம் அந்த வாய்ப்பை தட்டிக் கவிழ்த்துவிட்டது.

Sunday, 24 April 2022

பாதை - சிறுகதை

 

 எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் அனுபவங்கள் ஏராளமாக உண்டு. அவையனைத்தும் எச்சரிக்கைமணிபோல காலைவேளையில் ஒவ்வொரு கணமும் புற ஊக்கியாக ஒலித்து என்னை வீட்டைவிட்டுத் தள்ளிவிடும்.

Sunday, 7 March 2021

தெளிவு - சிறுகதை

 


உதடு குவித்து முகத்தைப் பறக்கவிட்ட மோகனின் உருவம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. வெறுமை படர்ந்த கணிப்பொறித் திரையை பெருமூச்சுடன் பார்த்தாள் ராதா. மெதுவாக சுவர்க்கடிகாரத்தை அண்ணாந்து நோக்கினாள். ஐந்து. ஜன்னல் வழியாக குளுமை படித்த காற்று வீசியது. அவன் பேசத் தொடங்கியபோது கடிகாரமுள் மூன்றில் இருந்தது. ஏறத்தாழ இரண்டுமணிநேரம் நீண்ட பேச்சு.

Tuesday, 13 October 2020

மாறிக்கொண்டிருக்கும் தளங்கள் - நூல் அறிமுகக்கட்டுரை

 


திருவிழாக் காலங்களில் வந்து சேரும் விருந்தினர்கள் வீட்டிலிருக்கும் ஒரு அக்காவையோ, அத்தையையோ, பெரியம்மாவையோ, கொழுந்தியையோ பார்த்துஅதே அரிசி, அதே மாவு, அதே வெல்லம். ஆனா நீ புடிக்கிற கொழுக்கட்டையில மட்டும் எப்படித்தான் இந்த இனிப்பு வந்து சேருதோஎன்று வியந்து பாராட்டி கண் மலர்வதைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. பல சமயங்களில் நாமே கூட அப்படி ஏதேனும் ஒரு வீட்டில் கண்மலர்ந்து நின்றிருப்போம். அதற்கு நிகராக வண்ணதாசன் சிறுகதைகள், அவற்றைப் படிக்கும் வாசகர்களை ஒவ்வொரு தருணத்திலும்  கண்மலர்ந்து நிற்கவைக்கின்றன. எல்லோரையும் சுற்றி நிற்கும் அதே மனிதர்களே வண்ணதாசனையும் சுற்றி நிற்கிறார்கள். அதே வாழ்க்கை. அதே வருத்தம். அதே மகிழ்ச்சி. ஆயினும் அவருடைய கதைத்தருணங்களிலிருந்து பாய்ந்தெழும் நொடிநேர அரைவட்டத்தின் வீச்சு அவருடைய சிறுகதைகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. மிகமிக நுட்பமாக நிகழும் இந்தத் தளமாற்றமே அவருடைய சிறுகதைகளின் சிறப்பம்சம். அவருடைய முதல் தொகுப்பான கலைக்கமுடியாத ஒப்பனைகள் முதல் எழுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக பிரசுரமாகியுள்ள தீராநதி வரை அந்தச் சிறப்பம்சம் வைரமென ஒளிவீசுகிறது.

Sunday, 5 April 2020

தெளிவு - சிறுகதை




உதடு குவித்து முகத்தைப் பறக்கவிட்ட மோகனின் உருவம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. வெறுமை படர்ந்த கணிப்பொறித் திரையை பெருமூச்சுடன் பார்த்தாள் ராதா. மெதுவாக சுவர்க்கடிகாரத்தை அண்ணாந்து நோக்கினாள். ஐந்து. ஜன்னல் வழியாக குளுமை படித்த காற்று வீசியது. அவன் பேசத் தொடங்கியபோது கடிகாரமுள் மூன்றில் இருந்தது. ஏறத்தாழ இரண்டுமணிநேரம் நீண்ட பேச்சு.

Tuesday, 14 November 2017

கலவரத்தின் பன்முகங்கள்


1998 ஆம் ஆண்டில் கோவை நகரில் மதக்கலவரம் நிகழ்ந்தது. 19 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருந்த பல இஸ்லாமியக் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பல வீடுகள் எரிக்கப்பட்டன. சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தை ஒரு சில மணி நேரங்களில் இழந்து மனிதர்கள் தெருவில் நிற்கும் நிலை உருவானது. அனைத்தும் ஆறா வடுக்களாக மாறி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரத்தை களமாகக் கொண்ட பல்வேறு சிறுகதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் அ.கரீம் என்னும் இளம் எழுத்தாளர்.

வன்மத்தின் கலை



சராசரி மனிதர்களின் எளிய வாழ்க்கையே நவீன இலக்கியத்தின் மையமாக விளங்குகிறது என்பது ஒரு பொதுவான இலக்கணம்.  தொடக்ககாலப் படைப்புகளில் ஏராளமான அன்றாடக்காட்சிகளின் தொகுப்பு தோராயமாக முன்வைக்கப்பட்டன.  மெல்ல மெல்ல அதே அன்றாடக்காட்சிகள் துல்லியத்தை நோக்கி நகர்ந்தன. மாபெரும் தருணங்கள் கதைவெளிக்குள் நிகழ்ந்தன. ஒரு காலகட்டத்தில் எளிய மனிதர்களுக்குள் ஒளிந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் சிறகு விரித்து விண்வெளியில் நீந்திச்செல்லும் பறவைகளும் சித்தரிக்கப்பட்டன. இன்னொரு காலகட்டத்தில் யானைகளின் பிளிறலும் அஞ்சி வளைகளுக்குள் ஓடோடி ஒளிந்துகொள்ளும் எலிகளின் நடுக்கமும் காட்சிப்படுத்தப்பட்டன. கையறுநிலையில் துன்பம் கொண்டு தவிப்பதையும் சின்னஞ்சிறு புன்னகையையே ஒரு துடுப்பாகக் கொண்டு அதே துன்பத்தைக் கடந்துபோகும் அற்புதத்தையும் மற்றொருகாலகட்டம் பதிவுசெய்தது.

Monday, 27 July 2015

நினைவில் வாழும் கதைகள் - எஸ்.செந்தில்குமாரின் ‘அலெக்ஸாண்டர் என்கிற கிளி’

புத்தாயிரத்தாண்டிலிருந்து எழுதத் தொடங்கிய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார். வலிமையான சித்தரிப்பு மொழியும் மிகக்குறைந்த நுட்பமான வரிகள் வழியாகவே பாத்திரங்களை அறிமுகப்படுத்தி நடமாடவைத்துவிடும் ஆற்றலும் செந்தில்குமாருக்கு கைவந்த கலைகள். தற்செயலாக எங்கோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி தன்னிச்சையாக பயணப்படுவதுபோல அவருடைய சிறுகதைகள் தோற்றமளித்தாலும், கதையைப் படித்து முடித்ததும் ஓர் அம்பின் பயணத்தைப்போல மிகச்சீரானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன், பூங்கா, அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, மண்டி என நடமாட்டம் மிகுந்த இடங்களில் கண்ணில் தென்படும் எந்த ஆண் பாத்திரத்தையும் பெண் பாத்திரத்தையும் மிகுந்த உயிர்த்துடிப்போடு தன் கதைக்குள் கச்சிதமாக கொண்டு வந்துவிடும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. இது செந்தில்குமாருடைய மிகப்பெரிய பலம்.