Home

Sunday 13 October 2024

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு

 

உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா. அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில். ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு. அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.

நினைவுச்சின்னங்கள்

 

தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர்கள் என்னும் முதன்மைத்தலைப்பும் இலக்கியம், இதழ்கள், பதிப்பகம் என வழங்கப்பட்டிருந்த துணைத்தலைப்பும்தான் இப்புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தூண்டின. பொருளடக்கத்தில் முப்பத்தொன்று தமிழ்ச்சான்றோர்களின் பட்டியல் காணப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், புதுமைப்பித்தன், கல்கி போன்றோர் அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்பட்டியலின் இடையிடையே காணப்பட்ட ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், பேராசிரியர் பி.என்.சீனிவாசாச்சாரியார், இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, மோசூர் கந்தசாமி முதலியார், அரிராம் சேட், அப்பா நா.அருணாசலம், மேகலிங்கம் சுப்பிரமணியன் போன்ற பெயர்கள் அனைத்தும் இதுவரை அறியாத பெயர்களாக இருந்தன. அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே ஒரே மூச்சில் இப்புத்தகத்தைப் படித்துமுடித்தேன்.

Sunday 6 October 2024

பா என்னும் மூதன்னை


நீண்டகாலம் தொடர்ச்சியாக நிலவிய பஞ்சத்தின் காரணமாகவும் பிளேக் தொற்றுநோயின் காரணமாகவும் 1918ஆம் ஆண்டில்  குஜராத்தைச் சேர்ந்த கேடா மாவட்ட விவசாயிகள் வரி கொடுக்க இயலாமல் தவித்தனர். அரசாங்கத்தின் கருணையை வேண்டி எழுதிய அவர்களுடைய கோரிக்கைக் கடிதங்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் நிலங்களையும் வீடுகளையும் பறிமுதல் செய்யத் தொடங்கினர்.அதன் விளைவாக படேல் பிற வழக்கறிஞர்களை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சத்தியாகிரகத்தை அந்த ஊரில் தொடங்கினார்.அத்தருணத்தில் தோரண என்னும் சிற்றூரில் ஒரு ரெவினியு அதிகாரி இருபத்துமூன்று வீடுகளை ஆக்கிரமித்து பறிமுதல் செய்தார்.பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பாத்திரம் பண்டங்களையும் கறவை மாடுகளையும் கூட பறிமுதல் செய்தார்.செய்தி கிடைத்ததும் அந்த இடத்துக்கு ஒரு பெண்மணி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்.அவர்கள் சோர்வுறாதபடி அவர்களிடையே சொற்பொழிவாற்றினார்.

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு


உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது.ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா.அதில் குறிப்பிட்டிருக்கிறார்.அவற்றில்.ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு.அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.