ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த
ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர்
எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார். ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில்
இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து
அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது.
ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான்
சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப்
புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு
எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக
நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.
Monday, 28 November 2016
Wednesday, 23 November 2016
தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்
எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு
வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில்
இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே
முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு
கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி
சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு
நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ
போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச்
செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு
வெட்டுவார். அருகில் ஓடும்
துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும்
வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’
என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான்
கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு
தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.
Friday, 18 November 2016
ஞானியின் பார்வை- விதையும் உரமும்
1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில்
ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம் அக்கட்டுரைகளை
ஒரு நூலாக வெளியிட்டது. வேதநாயகம் பிள்ளையின்
பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம்
ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின்
பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச சாஸ்திரியின்
தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின்
கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள்
எழுதப்பட்டன. அந்தக் காலத்தில் நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை
ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள் இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு
முயற்சிக்கும் மரபு என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம்
எல்லாத் திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து கொடுத்தவர்கள்
இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு. அவர்களுடைய முயற்சிகளை
வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத் தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக
எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் க.நா.சு.
காலபைரவனின் கதைகள் - கட்டுரை
சில ஆண்டுகளுக்கு
முன்பு எழுத்தாளரும் என் நண்பருமான அ.முத்துலிங்கம் ஒரு வாசகனுக்கு பல நூல்களைப்பற்றிய
அறிமுகங்கள் ஒரே தருணத்தில் கிடைக்கும்வண்ணம் ஒரு தொகுதியை உருவாக்க எண்ணினார். அதையொட்டி
ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அச்சமயத்தில் தான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைப்பற்றி
ஒரு கட்டுரையை எழுதி அனுப்பும்படி கேட்டார். தற்செயலாக அப்போதுதான் காலபைரவனின் முதல்
சிறுகதைத்தொகுதியான ‘புலிப்பாணி ஜோதிடர்’
புத்தகத்தைப் படித்துமுடித்திருந்தேன். உடனே அதைப்பற்றி ஒரு கட்டுரையை விரிவாகவே எழுதி
அனுப்பினேன். ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’
என்னும் தலைப்பில் அ.முத்துலிங்கம் அத்தொகுதியைக் கொண்டுவந்தார்.
Thursday, 10 November 2016
இருவேறு தோற்றங்கள் - மா.அரங்கநாதனின் சிறுகதைகள்
எங்கள் இளம்பருவத்துநாட்களில் விழாக்கால மகிழ்ச்சிக்கு
ஒருநாளும் குறைவந்ததே இல்லை.
ஒவ்வொரு விழா சமயத்திலும்
ஒரு புதுவிதமான விளையாட்டுப்பொருள் எங்கள் கைக்குக்
கிடைத்துவிடும். ’அவன் கையில்
இருந்ததுபோலவே எனக்கும் வேண்டும்’
என்று வீட்டுப் பெரியவர்களிடம் அழுது அடம்பிடித்து
எல்லோருமே வாங்கிவிடுவோம். ஆட்டப்பொருளின் கவர்ச்சி தீரும்வரைக்கும் கீழே வைக்கவே மனம்
வராமல் ஆடித் தீர்ப்போம்.
விழாக்காலக் கடைகளில் எங்களுக்காகவே
புதுப்புது விளையாட்டுப்பொருள்கள் வந்தபடியிருக்கும்.
Labels:
அரணை,
உலகு புரத்தல்,
உறவு,
சித்தி,
பாவண்ணன்,
மா.அரங்கநாதன்
Tuesday, 8 November 2016
புதிய கதைகள் புதிய அனுபவங்கள் (கட்டுரை)
என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே
உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில்
உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள்
எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள
அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு
அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி
வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக்
கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்
தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு
அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு
தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்.
அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம்.
ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

Subscribe to:
Posts (Atom)