எங்கள் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் கண்ணன். புத்தரின் வாழ்க்கையை ஒரு கதையைப்போல எங்களுக்கு அவரே முதன்முதலாகச் சொல்லிக் கொடுத்தவர். புத்தரை மட்டுமல்ல, ஏசு, காந்தி, வள்ளலார் போன்ற ஆளுமைகளைப்பற்றியெல்லாம் சின்னச்சின்ன கதைகள் வழியாக எங்களுக்கு அவரே அறிமுகப்படுத்தினார். அறியாத வயதில் நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கெல்லாம் விரிவான வகையில் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு பதிலைச் சொல்லிப் புரிய வைத்தவர். கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாத குரல் அவருக்கிருந்தது.
Friday, 19 January 2018
மருந்து - சிறுகதை
”பறந்துபோன கிளி திரும்பிவரும்ன்னு இன்னுமாடா நம்பற நீ?” என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா. நெருப்பில் வைத்த இரும்புவலைக்கரண்டியின் உள்குழியிலேயே என் கவனம் பதிந்திருந்தது. முதலில் ஒவ்வொரு கம்பியாக சிவக்கத் தொடங்கி, பிறகு அந்தக் கரண்டியே நெருப்பில் பூத்த மலர்போல மாறியது. பக்கத்தில் வைத்திருந்த கூடையிலிருந்து உலர்ந்த எருக்கம்பூவொன்றை எடுத்து கரண்டியில் போட்டேன். மறுகணமே, அது புகைவிட்டு எரிந்து, சிவந்து, பிறகு சுற்றியும் அடர்த்தியான நெடி பரவ கருகி சுருண்டு அடங்கியது. உடனே சாம்பலை முறத்தில் கவிழ்த்துவிட்டு அடுத்த பூவை எடுத்துப் போட்டேன்.
Tuesday, 19 December 2017
எட்டு மாம்பழங்கள் - சில பாடல்கள்
ஆசைகள்
அப்பா
அப்பா ஏரிக்கரைக்கு
போகலாமா?
ஆல
விழுதில் ஊஞ்சல் ஆடி
குதிக்கலாமா?
விழுந்து
கிடக்கும் நாவல் பழத்தை
எடுக்கலாமா?
மண்ணை
ஊதி அகற்றிவிட்டு
தின்னலாமா?
எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை
ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில்
பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த
ஊர் தொலைபேசி நிலையத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன். வேலையிடத்துக்கு என்னை அழைத்துச்
செல்லவேண்டிய நண்பர் தன் சொந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து என்னை அழைத்துச் செல்வார்.
அவருடைய சிரமத்தைக் குறைப்பதற்காகவும் பயணத்தொலைவைக் குறைப்பதற்காகவும் இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் இருந்த ஒரு பொது இடத்தை, இருவரும் சந்தித்துப் புறப்படும் இடமாக அமைத்துக்கொண்டோம்.
Wednesday, 13 December 2017
கனவுகளின் அறைகள் - தூயனின் சிறுகதைகள்
கடந்த ஒன்றிரண்டு
ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதி வாசகர்களின் கவனத்தை
ஈர்த்திருப்பவர் தூயன். பலவிதமான கூறுமுறைகளுக்கு ஏதுவாக கதைக்களங்களைக் கட்டமைக்கும்
விதங்களில் தூயனின் ஆர்வமும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வடிவப்பிசகில்லாதபடி ஒரு கதையைத்
தொடங்கும் கலையும் சரியான புள்ளியில் முடிக்கும் கலையும் தூயனுக்கு இயல்பாகவே கைகூடி
வரும் அம்சங்களாக உள்ளன.
Labels:
இருமுனை,
தூயன்,
பாவண்ணன்,
யாவரும் பதிப்பகம்
Sunday, 10 December 2017
கசப்பும் கனவும் - உமா மகேஸ்வரியின் சிறுகதைகள்
உமா மகேஸ்வரியை
ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில்
அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையொன்று
என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நதியையும் ஒரு பெண்ணின் புடவையையும் பல்வேறு
நிலைகளில் ஒப்புமைப்படுத்தியபடி செல்லும் அக்கவிதை. சின்னஞ்சிறு வயதில் அம்மாவின் புடவையென
அலையோடியிருக்கிறது நதி. பருவ வயதில் ஓரம் தைத்த தாவணியாக உருவம் மாறிக் கிடக்கிறது.
திருமணமாகி வேறு திசைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் தருணத்தில் நூலிழை பிரிந்த
கந்தலாகக் கிடக்கிறது. ஒருபுறம் காலம் ஒரு சிறுமியை திருமணம் முடித்த பெண்ணாக வளர்ந்து
நிற்கவைக்கிறது. மறுபுறத்தில் அதே காலம் அலைகளோடிய நதியை நீரோட்டம் இல்லாத சிறு குட்டையாகச்
சிறுக்க வைத்திருக்கிறது. இந்தக் கவிதையை இன்னும் என் நினைவில் பதிந்திருப்பதற்குக்
காரணம் நதியைக் குறிப்பிட உமா மகேஸ்வரி ’அம்மாவின் புடவை’ என கையாண்டிருக்கும் உவமை.
எந்த நதியைப் பார்த்தாலும் அந்த உவமை ஒருகணம் என் மனத்தில் எழுந்து மறையும்.
Labels:
அரளிவனம்,
உமா மகேஸ்வரி,
கணையாழி,
பாவண்ணன்
Saturday, 2 December 2017
கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி
உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட
அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை
ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள்
அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா”
என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு,
தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன்.
கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும்
இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள்
என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட
அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட
ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக்
கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
