Sunday, 23 February 2025
நித்யா
நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள்
கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஆரம்ப வகுப்புகளில் நெற்பானையும் எலியும் என்ற தலைப்பில் படித்த பாடல் அது. அதேபோல ஊகமுள்ள காகம் என்னும் பாடலையும் மறக்கமுடியாது.
Monday, 17 February 2025
கவிதை என்னும் கலை
நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் தம் மாணவர்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி தத்தம் துறைகளில் திறமை மிக்கவர்களாக மிளிர்வதற்குத் துணையாக இருக்கிறார்கள். அதே நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் அந்த மாணவர்களால் நன்றியுடன் நினைக்கப்படுகிறார்கள்.
மகத்தான கனவு
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத்தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின. உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன்.
Saturday, 8 February 2025
நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு
இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இம்மருத்துவ முறைக்கு பொதுமக்களின் பேச்சுவழக்கில் ஆங்கில மருத்துவம் என்ற பெயர் உருவாகி, அதுவே நிலைத்துவிட்டது.
கிருஷ்ண சுவாமி சர்மா : சமத்துவக்கனவின் சாட்சி
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள் கோகலேயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்ள நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்கு வந்து 14.04.1915 முதல் 29.04.1915 வரை சென்னையில் தங்கியிருந்தார். அப்போது 20.04.1915 அன்று இந்திய ஊழியர் சங்கக்கட்டிடத்தில் கோகலே கிளப் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடும் விதத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அவர் 1904இல் தென்னாப்பிரிக்காவில் தான் அமைத்த பீனிக்ஸ் குடியிருப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் காந்தியடிகள் ஆசிரமம் எதையும் தொடங்கியிருக்காத நேரம் அது. வெகுவிரைவில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தம்மோடு வந்த சில தமிழர்களோடு இணையான எண்ணங்களோடிருக்கும் வேறு சிலரையும் இணைத்துக்கொண்டு ஓர் ஆசிரமத்தைத் தொடங்கும் திட்டம் மட்டும் இருந்தது.
Monday, 3 February 2025
மாபெரும் புதிர்
பிரதமரான நேருவிடம் ஒரு நேர்காணலில் “காந்தியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்றொரு கேள்வியை ஒரு நிரூபர் கேட்டார். அதற்கு நேரு ”அச்சமின்மையும் எளிமையும் நல்லிணக்கப்பார்வையும் உண்மையும் ஊக்கமும் கொண்ட செயல்திறமையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவர் இதைத்தான் கடைசி மூச்சு வரை கற்றுக்கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்” என்று பதில் சொன்னார். காந்தியடிகளை இதைவிட ஒரு சிறந்த ஒரு பதிலால் ஒருவரும் வரையறுத்துவிட முடியாது.
விலைமதிப்பில்லாத வைரங்கள்
ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள ஒரு சிறுவனின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அவர் அச்சிறுவனிடம் மெல்லிய குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். தொலைவு காரணமாகவும் காற்றுவீச்சு காரணமாகவும் எதுவும் காதில் விழவில்லை. நடை சுவாரசியத்துக்காக ஏதேனும் ஒரு கதையை அச்சிறுவனுக்கு அவர் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும் என நானாகவே நினைத்துக்கொண்டேன். சிறுவயதில் என் தாத்தாவின் கையையும் அப்பாவின் கையையும் பற்றிக்கொண்டு நடந்த பழைய காலத்து நினைவுகள் ஓரிரு கணங்கள் மனத்தின் மூலையில் மின்னி மறைந்தன.