ஒரு நல்ல சிறுகதை என்பது அதில் சொல்லப்பட்டதைவிட சொல்லாதவற்றை
நினைத்துக்கொள்ளவும் அந்த நினைவுகளில் தோய்ந்திருக்கவும் ஒரு வாசகனைத் தூண்டும் தன்மையுடையதாக
இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நவீனத்துவத்தின் பார்வை படிந்த சிறுகதை, நவீனத்துவத்துக்கு
முந்தைய காலத்தைச் சேர்ந்த சிறுகதை, குறியீடுகளாலான சிறுகதை, பின்நவீனத்துவத்தின் பார்வையை
முன்வைக்கும் சிறுகதை என எந்தக் காலத்தைச் சேர்ந்த கதையாக இருந்தாலும், அவை சிறந்த
படைப்பாக இருப்பதற்கு இந்தத் தன்மைதான் முக்கியமான காரணம். படிப்பதற்கு மிகமிக எளிமையானவையாக
காட்சியளிக்கக்கூடிய அசோகமித்திரன் கதைகளில் சொன்னதைவிட சொல்லாத பல கூறுகள் அதன் உள்ளடுக்குகளில்
நிறைந்திருப்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணரமுடியும்.
Monday, 30 May 2016
Monday, 16 May 2016
மாறுபட்ட அனுபவம்
கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’
கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும்
முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை.
தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும்
வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின்
தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு
ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான
சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.
Labels:
கதிர்பாரதி,
தமிழ்க்கவிதை
Subscribe to:
Posts (Atom)