Home

Monday 30 January 2017

சாம்ராஜின் சிறுகதைகள் - இழந்தவர்களின் உலகம்



சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ். இதற்கு முன்பு தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வந்த அனுபவத்தில் அவருக்கு மிக இயல்பாகவே படைப்புமொழி கைகூடி வந்திருக்கிறது. ஒரு படைப்பில் எந்த அம்சம் முன்வைக்கப்பட வேண்டும், எந்த அம்சத்தை மறைக்கவேண்டும், எது இலைமறை காயென இருக்கவேண்டும் என்னும் தெளிவையும் அவர் அடைந்திருக்கிறார். பத்து சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கும் அவருடைய முதல் தொகுதி அவருடைய வரவை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.

Tuesday 17 January 2017

குழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’



தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச் சேய்கள் அவருடைய தொடக்கக் காலத்தொகுதிகளில் மிகமுக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.

இயற்கைக்காட்சிகளின் சொல்லோவியத் தொகுப்பு - தங்கப்பாவின் ‘காரும் கூதிரும்’




குறுந்தொகையைப்பற்றி நானும் நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து ஆளுக்கு சில வரிகளை நினைவிலிருந்து சொல்ல முயற்சி செய்வதில் வந்து முடிந்தது. கணநேர யோசனைக்குப் பிறகு கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே, கன்றும் உண்ணாது கலத்திலும் படாது, கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் என நண்பர் வேகவேகமாக ஒரு பத்து வரிகளைச் சொன்னார். என் பங்குக்கு நானும் சிறுகோட்டுப் பெரும்பழம், செம்புலப்பெயல்நீர், யாருமில்லை தானே கள்வன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியல், நோக்கிநோக்கி வாள் இழந்தனவே என சில வரிகளை முன்வைத்தேன். அப்படிச் சொல்ல முடிந்ததில் இருவரும் மகிழ்ச்சியுற்றோம். படித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி அந்த வரிகள் மனத்தில் தங்கியிருக்கின்றன என்றொரு கேள்வி எழுந்தது. சொற்கள் அடுக்கப்பட்டிருந்த முறையும் சொன்ன விதமுமே மிகமுக்கியக் காரணங்கள் என்பதை அக்கணத்தில் கண்டடைந்தோம்.