Home

Sunday 28 August 2022

எஸ்.ஆர்.சுப்பிரமணியன் : துன்பம் துடைத்தூன்றும் தூண்

 

இந்தியச் சமூகத்தில் தீண்டாமைப்பழக்கத்தை அழித்தொழிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் காந்தியடிகள் 30.09.1932 அன்று தேசிய அளவில் தீண்டாமைக்கு எதிரான செயல்திட்டங்களைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினார். நாளடைவில் அந்த அமைப்பே  அரிஜன சேவா சங்கம் என பெயர்மாற்றம் பெற்றது. தொடக்கத்தில் அதன் தலைவராக கன்ஷியாம் தாஸ் பிர்லாவும் செயலராக அம்ரித்லால் தக்கரும் பணியாற்றினர்.  நாடெங்கும் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் பங்கெடுத்துக்கொண்ட தொண்டர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர்.

தீ - சிறுகதை

 அநேகமாய் எனக்கு விதிக்கப்போகிற தண்டனை அதிகபட்சமாய் இருக்கக்கூடும் என்றும், என்னை வேலையை விட்டே எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் என் சிநேகிதர்கள் சொன்னார்கள். அவர்கள் பேச்சில் முன்பு போல என்னுடன் ஒட்டுதல் வளர்க்கும் ஆர்வமோ, அன்யோன்யமோ இல்லை. எல்லாமே ஒரு கணத்தில் வடிந்துவிட்ட மாதிரி வறட்சியாகவும்  பீதி ஏற்படுத்துவதாகவும் இருந்தன. என்னுடன் பேசுவதில் கூட கலவரம் கொண்டது போல் தோன்றியது. அவர்கள் முகங்களில் அழுத்தமான பய ரேகைகளைக் காணமுடிந்தது.

Thursday 25 August 2022

கு.அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 2

 

இன்னொரு முக்கியமான சித்திரம் சந்திப்பு கதையில் இடம்பெறும்

சின்னம்மா. காவேரிப்பாட்டியைப் போலவே இவளும் ஓர் அபலை.

சின்ன வயதில் துடிப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்தவள்தான் அவள்.

பக்கத்துவீட்டுக் குழந்தை என்றுகூடப் பாராமல் பாசத்தை மழையாகப்

பொழிந்தவள். அவளுடைய பாசமழையில் நனைந்த ஒருவன் பதினைந்து

ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய நினைவுகளைச் சுமந்தபடி அந்தச்

சின்னம்மாவைப் பார்க்கவருகிறான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவன் பார்ப்பதுமுற்றிலும் வேறொரு சின்னம்மாவை. காலத்தாலும்

மனிதர்களாலும் வஞ்சிக்கப்பட்டவளாக விதவைக்கோலத்தில் இருக்கிறாள்

அவள். சொத்தையெல்லாம் சொந்தக்காரர்களிடம் பறிகொடுத்துவிட்டு

கூலிவேலை செய்து பிழைக்கிறாள். யாரோ ஒருவனுடைய வீட்டின்

கு. அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 1


விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில்

எங்கள் ஊரான வளவனூர் ரயில்வே ஸ்டேஷன்

இருக்கிறது. இரண்டு நகரங்களுக்குமிடையே ரயில்

போக்குவரத்து செழிப்பான நிலையில் இருந்தபோது

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஒரு பெருமை

இருந்தது. மக்கள் ஆதரவு குறைந்து போக்குவரத்தில்

மந்தநிலை உருவானபோது எங்கள் ஸ்டேஷன்

கைவிடப்பட்ட கட்டடமாக உருக்குலைந்தது. ஏதோ

பழங்காலத்து நினைவுச்சின்னம்போலப் பல ஆண்டுகள்

அப்படியே நின்று சிதையத் தொடங்கியது.

குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சி நின்றிருந்தன.

Saturday 20 August 2022

கனவைப் பின்னும் கலை


     ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களின் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுக்கு இடையில் அவர்கள்ஒரு நல்ல கதை சொல்லுங்க பெரியப்பாஎன்றனர். சில கணங்கள் யோசித்துவிட்டு ஒரு ஊருல ஒரு ராஜாஎன்று தொடங்கினேன். உடனே ஒரு சிறுமி என்னைத் தடுத்து ராஜா கதையெல்லாம் வேணாம். வேற சொல்லுங்கஎன்று தடுத்துவிட்டாள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஒரு ஊருல ஒரு மந்திரவாதிஎன்று தொடங்கினேன். “ஐயையோ, மந்திரவாதி கதை, பூதம் கதைலாம் வேணாம்என்று வேறொரு சிறுமி தடுத்தாள். இப்படி நான் தொடங்கிய விலங்கு கதை, பறவை கதை, இளவரசி கதை, பாட்டி கதை எல்லாவற்றையும் முதல் வரியிலேயே வேணாம் வேணாம்என்று தடுத்துவிட்டனர். “இதெல்லாம் எங்களுக்கே தெரியும், ஏதாச்சும் புது மாதிரி சொல்லுங்கஎன்றனர்.

எப்பிறப்பில் காண்போம் இனி - முன்னுரை

   

காந்திய ஆளுமைகளைப்பற்றி நான் எழுதிவரும் கட்டுரைகளை  முன்வைத்து நண்பரொருவர் பேசிக்கொண்டிருந்தார். காந்திய ஆளுமைகளின் மன உறுதியையும் தியாகத்தையும் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் மெய்சிலிர்ப்பதாகக் குறிப்பிட்டார் அவர். அந்த ஆளுமைகளுடைய வாழ்க்கை இன்று ஒரு பேசுபொருளாக அமைவதற்கு அவர்களுடைய சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்புணர்வும் மிகமுக்கியமான காரணங்கள். நம்மால் வாழமுடியாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு மனிதனாக வாழ்வது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மகத்தான வாழ்க்கை, மகத்தான மனிதர்கள் என்று சொல்லிவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தினார்.

Sunday 7 August 2022

அகம் மலர்ந்த தருணங்கள்

  

கற்பதன் வழியாக நாம் அடைவது கல்விஞானம். விடாமுயற்சியும் ஊக்கமும் அதற்கு அவசியம். சொந்தமாகக் கற்க இசைவான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மற்றவர்கள் வழியாக சிறுகச்சிறுக அறிந்துகொள்வது கேள்விஞானம். அதற்கு பொறுமையும் நட்பார்ந்த சூழலும் அனைவரோடும் நெருங்கிப் பழகும் நல்லிணக்க மனமும் அவசியம். வாழ்வில் தானே நேரில் கண்டதும் கேட்டதுமான நிகழ்ச்சிகள் வழியாகவும் பிறர் சொல்லக் கேட்ட நிகழ்ச்சிகள் வழியாகவும் எங்கெங்கோ துணுக்குத்துணுக்காகப் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டவை வழியாகவும் நாம் அடைவது   அனுபவஞானம். மூன்று வழிகளும் முக்கியமானவை. மூன்றுமே நம் மனவிரிவுக்கு வழிவகுப்பவை. மனம் விரிந்தால்தான் நம் பார்வை விரியும். மனம் சுருங்கினால் வாழ்க்கையே சுருங்கிவிடும்.

சட்டை - சிறுகதை

 தனபாலுக்கு சட்டைதான் பெரிய பிரச்சனை.

வேறு ஏதாச்சும் சொல்லி கலாட்டா செய்தால் கூட பரவாயில்லை. கழுதை, குதிரை, தீவட்டி என்று கிண்டல் செய்தால் கூட பதிலுக்குப் பதில் மாடு, பன்றி, புண்ணாக்கு என்று கிண்டல் செய்துவிட்டு விடலாம். பதில் கிண்டல் செய்வதில் இஷ்டம் இல்லாவிட்டால் கூட போனால் போகட்டும் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால்போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்என்று கூப்பிட்டு கலாட்டா செய்வது தான் தாங்கமுடியாத அசிங்கமாயும் ஆத்திரமாயும் இருந்தது. அதுவும் கண்ட கண்ட பேப்பர்களையெல்லாம் மடித்து தபால் போடுகிற மாதிரி சட்டைக் கிழிசலுக்குள் கை விட்டு பிள்ளைகள் போடும் போது அளவுக்கு மீறி வேதனையாய் இருந்தது