Home

Saturday 27 October 2018

கதவு திறந்தே இருக்கிறது - இவை குறுஞ்சித்திரங்கள் மட்டுமல்ல



கோவில்பட்டியில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக இறந்துவிடுகிறார். நடுவயதில் இறந்துவிட்ட அவருக்கு மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு பிள்ளைகள். காந்தியடிகளின் மறைவுதினத்தின் பிறந்ததால், ஏதோ ஒரு விதத்தில் அவரை நினைவூட்டும் வகையில் இருக்கவேண்டும் என நினைத்து பாரததேவி என போலீஸ் அப்பாவால் பெயர்சூட்டப்பட்ட பெண்குழந்தையும் இவர்களில் ஒருவர். பிழைக்க வழியறியாத அக்குழந்தைகளின் தாய் தன் சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு வந்துவிடுகிறார். அல்லும்பகலும் வயல்காட்டில் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார். அம்மாவுக்குத் துணையாக பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த நேரம் போக மற்ற நேரங்களில் மாடு மேய்க்கச் செல்கிறார்கள். புல்லறுத்துக்கொண்டு வருகிறார்கள். விறகு சேகரித்து எடுத்துவருகிறார்கள். காட்டுவழி நெடுக நின்றிருக்கும் மரம், செடி, கொடிகளில் பார்க்கும் காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்கிறார்கள்.

பொன்செய் உலைக்களம் - கட்டுரை



பொன்செய் உலைக்களம்என்பது தங்கப்பாவின் பாடலொன்றில் இடம்பெறக்கூடிய சொல். அவர் உருவாக்கிய மிகச்சிறந்த சொல்லிணைவுகளில் ஒன்று. அவருடைய ஒட்டுமொத்தமான பாடல்களின் உலகத்திலிருந்து இத்தகு நூறு சொல்லிணைவுகளை நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு சொற்கள்மீது ஆர்வமும் காதலும் கட்டுப்பாடும் கொண்டவர் தங்கப்பா. செம்புலப்பெயல்நீர், மீனெறி தூண்டில், அணிலாடு முன்றில், குப்பைக்கோழி போன்ற சங்ககாலப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற சொல்லிணைவுகளை நினைவூட்டும் வகையில் தங்கப்பா உருவாக்கியிருக்கும் சொல்லிணைவுகள் அமைந்துள்ளன. ஒருவகையில் சங்கப்பாடல்களின் தொடர்ச்சியாக அவர் நம்மிடையே வாழ்ந்தார்.

Tuesday 16 October 2018

எத்தனை எத்தனை மனிதர்கள் - சு.வேணுகோபால் சிறுகதைகள்



தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தது. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்

புத்தகம் - ஞானத்தின் வழி - கட்டுரை




ஆண்டன் செகாவ் என்னும் ரஷ்ய எழுத்தாளரின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றுபந்தயம்’. மிகவும் சிரமமானது மரண தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா என்பதையொட்டி இரு நண்பர்களிடையே மிகவும் சாதாரணமாக தொடங்குகிற உரையாடல் இறுதியில் பந்தயத்தில் முடிகிறது. ஆயுள் தண்டனை அப்படியொன்றும் சிரமமானதல்ல என்று உரைக்கும் நண்பன் தனியறையில் குறிப்பிட்ட ஆண்டு காலம் அடைபட்டிருந்து அதை நிரூபிக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பந்தயம்.. பந்தயக்காலம் முழுதும் அவன் அவ்விதமாக தனியறையிலேயே கழித்துவிட்டால் மிகப்பெரும் தொகையை அவனுக்குத் தருவதாக பந்தயம் கட்டுகிறான் மற்ற நண்பன்.

Sunday 7 October 2018

சைக்கிள் - சிறுகதை


மங்கான் தெரு, மாதாகோவில் தெரு, சாமியார் தோட்டம் என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள் கூடையிலிருந்த பத்து கோழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் ஏழேகால் மணிக்கு தமிழ்ச்செய்திகள் வாசிக்கிற நேரத்தில் கிளம்பினார்கள். எட்டுமணி சங்கு ஊதுகிற நேரத்துக்குள் வியாபாரமே முடிந்துவிட்டது. “எல்லாமே நீ சைக்கிள் தள்ற ராசிடாஎன்று முத்துசாமியின் முதுகில் தட்டினார் அவன் அப்பா.

மரணம் - சிறுகதை



காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.

Wednesday 3 October 2018

ஒரு துளி நீர் - விட்டல் ராவின் ’நதிமூலம்’



கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி அவருடைய மன அமைப்பைப் புலப்படுத்தும் தன்மையில் உள்ளது. தீண்டாமை உச்சத்தில் இருந்த முப்பதுகளில், குளத்தில் விழுந்துவிட்ட சிங்காரவேலுப்பிள்ளையின் மனைவியைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் சென்ற பெண்கள் கரையில் நின்று சத்தம் போடுகிறார்கள். அத்தருணத்தில் தெருவில்  நடமாடிக்கொண்டிருந்த எல்லாச் சாதி ஆண்களும் அக்காட்சியைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்