Home

Sunday 27 August 2023

புங்கம்பூ - கட்டுரை

 

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் திடல் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஒலிம்பிக் மைதானம். பேஸ் பால், கிரிக்கெட், கபடி, கோகோ, ரிங்பால் என நாங்கள் விளையாடும் எல்லா ஆட்டங்களுக்கும் அதுதான் ஆடுகளம். ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த இடத்துக்கு ஆடுவதற்கு வந்துவிடுவோம்.  விடுமுறை நாட்களில் காலை நேரத்திலும் ஆடுவோம். மாலை நேரத்திலும் ஆடுவோம்.  

ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை

 காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.

Sunday 20 August 2023

மதிப்பிடும் கலை

  

கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியப்படைப்புகளை எந்த வடிவத்தில் படித்தாலும், அந்தப் படைப்பில் புகைப்படத்தைப்போல அரிதான ஒரு காட்சிச்சித்திரத்தைக் கண்டடையும்போது மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது. உடனடியாக அது மனத்தில் பதிந்துவிடுகிறது.  அந்தப் படைப்பை காலமெல்லாம் நினைத்துக்கொள்ள அப்படிப்பட்ட ஒரு துண்டுக்காட்சியே போதும். அதன் வழியாக அந்தப் படைப்பை நினைவிலிருந்து மீட்டெடுத்துவிடலாம்.

கழிமுகம் - சிறுகதை

 

நீதிமன்ற வாசலில் குழந்தையோடு வெளியேறிய ருக்மணியின் முகம் மீண்டும் மீண்டும் சிவபாலனின் மனத்தில் மிதந்தபடி இருந்தது. பரபரப்பில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவித்தான். ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. அசோக மரங்கள், விடுதி வாசல், வாகன நிறுத்தங்கள், பூங்கா, சாலைவரை ஒரே பார்வையில் தெரிந்தன. காலையில் இருந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிரை உணரமுடிந்தது. குறித்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தால் எந்தக் கணமும் சாலையிலிருந்து விடுதியின் வாசலை நோக்கி வரப் போகிற சாக்லெட் நிற சாண்ட்ரோ காரை எதிர்பார்த்திருந்தான். ஏமாற்றத்தில் அலுத்துத் திரும்பிச் சில கணங்கள் படுக்கையில் விழுந்தான். கைக்கு அருகிலேயே இருந்த மின்விசிறியை இயக்க குமிழியைத் திருப்பினான்

Sunday 13 August 2023

திறப்பு விழா - கட்டுரை

 

”அன்புள்ள மாணவர்களே. இந்தப் பிரார்த்தனை வேளையில் உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கினார் எங்கள் தலைமையாசிரியர்.

உயரத்தை நோக்கி - சிறுகதை

 ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்ததும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஒரே ஒருநாள் பழக்கத்தில் ஒரு வாரமாகத் தொடர்ந்து வரத் தொடங்கிவிட்டது. புதிய ஊரில் புதிய நட்பு. வாழ்க்கைக்கான ஒரு திசையைத்தேடி தன்னைப்போலவே இடம்பெயர்ந்து வந்ததாக இருக்குமோ என்று தோன்றியது. உள்ளே சென்று வழக்கம் போல கைநிறைய அரிசியை அள்ளிவந்து வைத்தாள். அது கொத்தியெடுக்கும் வேகத்தையே நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தாள். புத்தம் புதிய ஜன்னல் திரைச்சீலை காற்றில் அசைந்தது. பதினோரு மணியளவில் கூட காற்றின் குளுமை ஆச்சரியப்படவைத்தது. நடந்து அருகிலிருந்து மற்றொரு ஜன்னலருகே சென்றாள். பளிச்சென்றிருந்த வானமும் அருகருகே நின்றிருந்த உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளும் மலைப்பைத் தந்தன.

Sunday 6 August 2023

முகம் - கட்டுரை

 

 பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது.  ரயில்வே ஸ்டேஷன் நெம்புகோல் மேடைக்கு அருகில் மாலை விளையாட்டை முடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நேரத்திலும் எங்கள் உரையாடல் மிக இயல்பாக ஆற்றுத்திருவிழாவை நோக்கியே திரும்பியது.

தந்தை என்னும் தெய்வம்

  

அப்பாவைப்பற்றிய மகளின் நினைவுப்பதிவுகள் எழுத்திலக்கியத்தில் மிகவும் குறைவு. ஆனால் வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு வகைமையான ஒப்பாரிப்பாடல்களில் அவை அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன. அப்பாவின் மறைவையொட்டி மகள் பாடும் விதமாக அமைந்திருக்கும் ஒவ்வொரு ஒப்பாரிப்பாடலும் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.