Home

Sunday 25 July 2021

ஒரு வாசகர் இலக்கியத்திலிருந்து பெறுவது என்ன? - கட்டுரை

  

ஆங்கிலேயர் போற்றும் மாபெரும் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர்.  அவர் எழுதிய நாடகங்கள் அனைத்தும் மேடையில் நடிக்கப்பட்டனவே தவிர, அவை நூல்வடிவம் பெறவில்லை. அவர் எழுதிய முப்பத்தாறு நாடகங்களில் அவர் உயிரோடு இருந்த காலத்தில்  பதினெட்டு நாடகங்கள் மட்டுமே நூல்வடிவம் பெற்றிருந்தன. எஞ்சியவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய நாடகங்களில் நடித்துவந்த ஜான் ஹெமிங்க்ஸ் என்பவரும் ஹென்றி கோண்டெல் என்பவரும் இணைந்து அனைத்து நாடகப் பிரதிகளையும் உள்ளடக்கி FIRST FOLIO என்னும் தலைப்பில் 1623இல் ஒரு தொகைநூலை அச்சிட்டு வெளியிட்டனர். இதுவே ஷேக்ஸ்பியரின்  முதல் நாடகத் தொகுப்புநூல். இவை 750 பிரதிகள் மட்டுமே அந்தக் காலத்தில் அச்சிடப்பட்டன. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் கடந்த நிலையில் அச்சிட்ட பிரதிகளில் தற்சமயத்தில் எஞ்சியிருப்பவை 19 பிரதிகள் மட்டுமே. அவற்றில் நல்ல நிலையில் இருப்பது ஒரே ஒரு பிரதி மட்டுமே. ஒரு மதபோதகரின் நூலகத்தை ஏலத்தில் எடுத்த போது, இன்னொரு மதபோதகரின் கைக்குச் சென்றது அப்பிரதி. அவரே இன்றுவரை அப்பிரதியைப் பாதுகாத்து வருகிறார்.

இரண்டு தளங்கள் - முன்னுரை

  

போக்கிடம் நாவல் 1976இல் இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது. 1984இல் என் திருமணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பரொருவர் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அப்போதுதான் அதை முதன்முதலாகப் படித்தேன். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாகப் படித்தேன்.

காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் : தன்னடக்கத்தின் சிகரம்

         கதராடைகளை அணியவேண்டிய தேவையைப்பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவும் கதர்ப்பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு பீகார், மத்தியப்பிரதேசம் முழுதும் மூன்றுமாத காலம் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். பிறகு பம்பாய் வழியாக கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நிலை குன்றியது. ஏறத்தாழ நான்கு மாத காலம் அவர் கர்நாடகத்திலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.

Monday 19 July 2021

தீரா வேட்கை - கட்டுரை

  

இன்றைய கவிதைப் படிமங்கள் இருவகையான சித்திரங்களை வாசகர்களுக்கு அளிக்கின்றன. ஒன்று துயரத்தின் சித்திரம். இன்னொன்று புன்னகையின் சித்திரம். இரண்டுமே மானுட வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத அம்சங்கள். இவையிரண்டும் மாறிமாறி நிகழ்ந்து வாழ்க்கையை ஒரு மாறாத புதிராகவே இந்த மண்ணில் நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு கவிஞனின் நெடும்பயணமும் அந்தப் புதிருக்கான விடையைத் தேடும் முயற்சிகளே. கதிர்பாரதியின் கவிதைகளை அத்தகு நெடும்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நவீன கவிஞனின் கையேட்டுக்குறிப்புகள் என்று சொல்லலாம்.

வெளிச்சத்தைத் தேடும் ஆவல் - கட்டுரை

  

சமீபத்தில் கி.ராஜநாராயணனின் மறைவையொட்டி அவருடைய சிறுகதைகளை ஒருசேர மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கூட சலிக்காத வகையில் கதைகள் அனைத்துமே கட்டுக்கோப்பாக இருந்தன. தாத்தையா நாயக்கர், அண்ணாரப்பக்கவுண்டர், மொட்டையக்கவுண்டர், பாவய்யா, கோமதி செட்டியார், கோனேரி, பேச்சி, பூமாரி என வகைவகையான மனிதர்களைப்பற்றிய கதைகளைப் படிக்கப்படிக்க ஆச்சரியமாகவே இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில், ஒரு பத்து முறையாவது இக்கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுசாகப் பார்ப்பதுபோலவே இருப்பதை உணர்கிறேன். நவீன சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் பிறழுறவு, துரோகம், வஞ்சம், வன்மம், இருள் ஆகியவற்றைப் படித்ததால் அடைந்த சலிப்பை அந்த மீள்வாசிப்பு முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது. அந்த மானுடச் சித்திரங்களால் அன்று மனம் நிறைந்துவிட்டது.

Monday 12 July 2021

திருநீறு பூசிய முகம் - கட்டுரை

 

இரண்டு ஊர்களுக்கிடையிலான கேபிள் பாதையை நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிவிட முடியாது. அதற்கு முன்பு செய்துமுடிக்க வேண்டிய சில வேலைகள் உண்டு. பெரும்பாலும் சாலையை ஒட்டியே கேபிள் பாதை அமைவதால், சாலைத்துறையினரை அணுகி வேலையைத் தொடங்குவதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு வகையான நிர்வாகங்களின் கீழ் சாலை பிரிந்திருக்கும். ஒவ்வொரு நிர்வாகத்தின் எல்லைக்குள் அடங்கிய பாதையின் நீள விவரங்கள் அடங்கிய குறிப்புகளோடு அவர்களை அணுகினால் மட்டுமே அதைப் பெறமுடியும். அதற்குப் பிறகு  வாகனங்களின் தினசரி இயக்கத்துக்கு இசைவாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் நிலையத்தை முடிவு செய்யவேண்டும். எல்லாவற்றையும் விட பள்ளம் தோண்டுவதற்குத் தேவையான ஊழியர்களைத் திரட்டுவது முக்கியமான வேலை.

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

  

திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு ஒரு வாசகர் பாராட்டி எழுதினார். அவர் நண்பர் செல்வராஜ். அவருடைய சொந்த ஊர் சிதம்பரம்.