Home

Sunday 30 April 2023

ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும் - கட்டுரை

 

“அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?” என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். “எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த கழனிப்பானையில  ஊத்திட்டு வா” என்று என் பக்கம் திரும்பாமலேயே குண்டானிலிருந்த அரிசியைப் பார்த்தபடி சொன்னாள் அம்மா. எங்காவது கல் தென்படுகிறதா என அவள் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.

இனிமையும் இனிமையின்மையும் - கட்டுரை

 

சில நாட்களுக்கு முன்பு நண்பரொருவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். கூடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது பின்கட்டிலிருந்து பலாப்பழத்தின் இனிய மணம் வந்தது. “என்ன, பலாப்பழத்து வாசனை போல இருக்குதே? வாங்கிவந்தீங்களா? எங்க கிடைச்சது?” என்று கேட்டேன்.  “நான் வாங்கிவரலை. நேத்து ஊருலேர்ந்து அத்தை வந்தாங்க. அவுங்க வாங்கிட்டு வந்த பழம். அவுங்கதான் அறுத்து சுளை எடுக்கறாங்க” என்றார் நண்பர்.

Saturday 22 April 2023

பொங்கல் - சிறுகதை

 

கல் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்த புதுப்பானையில் கொதித்து நுரைத்துவரும் பொங்கலைக் கரண்டியால் கிளறிக்கிளறி பக்குவம் பார்த்தாள் பட்டம்மாள். கழுத்திலும் நெற்றியிலும் வழியும் வேர்வையை முந்தானையால் ஒற்றிஒற்றி துடைத்தபடி உஸ்உஸ் என்று ஊதி வெப்பத்தை ஆற்றிக்கொண்டாள். ஆட்டத்தின் உற்சாகத்தில் அடுப்பை நெருங்கிவரும் பிள்ளைகளைபொங்கப்பானையில இடிச்சிக்கப் போறிங்கடா, அந்தப் பக்கமாக போய் ஆடுங்கடா பசங்களாஎன்று அனுப்பினாள். கரும்புகை வளைந்துவளைந்து கட்டையான ஒரு கோடுபோல மேலே எழுந்தது. பானையின் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த மஞ்சள் கிழங்கின்மீது கருமை படிந்தது.

இரண்டு மரங்கள் - சிறுகதை

 ராஜாத்தி அம்மாவைப்பற்றி நான் இரண்டு காட்சித் தொகுப்புகளை உருவாக்கியிருந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாத்தி அம்மாவின் பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்திருந்த தருணத்தில்தான்இரண்டு மரங்கள்என்னும் தலைப்பில் முதல்தொகுப்பு தயாரிக்கப்பட்டது. கடந்த வாரம் பத்மஸ்ரீ  விருதை அவர் அரசாங்கத்திடமேயே திருப்பித் தந்ததையொட்டிஒரு லட்சம் மரங்கள்என்னும் தலைப்பில் இரண்டாவது தொகுப்பு தயாரிக்கப்பட்டது. காட்சிப்படுத்த எந்த விதமான வாய்ப்பும் இல்லாமலேயே இரண்டும் பெட்டிக்குள் முடங்கிவிட்டன. ஆசிய விளையாடடுப் போட்டியில் ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்ற மதுராந்தகம் தேவிகாவைப் பற்றிய காட்சித்தொகுப்பும் இறால் பண்ணைத் தடுப்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஜகன்னாதனைப் பற்றி காட்சித் தொகுப்பும் ஊடக உலகில் எனக்கென்று ஓர் நட்சத்திர அந்தஸ்தைத் தேடித் தந்தவை. அவ்வரிசையில் இந்த இரண்டு தொகுப்புகளும் இணைத்து கவனிக்கத்தக்கவை. துரதிருஷ்டவசமாக காலம் அந்த வாய்ப்பை தட்டிக் கவிழ்த்துவிட்டது.

Sunday 16 April 2023

ஒரு சொல் - கட்டுரை

 

ஆறாம் வகுப்பிலேயே நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துவிட்டாலும் உண்மையான உயர்நிலை வகுப்பு என்பது ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர் கூட ஒன்பதாம் வகுப்புக்கு வரமாட்டார்கள் என்றும் எல்லாப் பாடங்களுக்கும் புதிய ஆசிரியர்களே வருவார்கள் என்றும் முதல் நாள் பிரார்த்தனையிலேயே சொல்லிவிட்டார்கள்.  

சாரத்தை நெருங்கும் கலை

  

கவிதை என்பது கருத்துகளைத் திரட்டிப் பாதுகாத்துவைக்கும் பேழையென  ஒரு தரப்பும் அழகியல் கூறுகளால் அணிசெய்து காட்சிக்கு வைக்கும் சிலையென இன்னொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் ஓங்கியொலித்தபடி இருந்த ஓர் இக்கட்டான தருணத்தில் அழகியல் கூறுகளையும் உருவகமாக மாற்றப்பட்ட கருத்துகளையும் சரியான விகித அளவில் இணைத்து மரபுப்பாடல்களைப் புனைந்து கவன ஈர்ப்பை உருவாக்கிய முக்கியமான பாவலர் ம.இலெ.தங்கப்பா. தாளக்கட்டும் கற்பனைநயமும் அழகான சொல்லாட்சியும் அமையாத பாடல்கள் எல்லாமே சோளக்கொல்லை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு நிகரானவை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

Sunday 9 April 2023

எது இனிய இல்லறம்?

 

தமிழில் நாவல்கள் உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே இல்லற வாழ்வின் சிக்கல்கள் ஒரு பேசுபொருளாக மாறிவிட்டது. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்துகொண்டதையும் சிக்கலில் சிக்கிக்கொண்டதையும் பிறகு மீண்டு வந்து இணைந்து வாழ்வாங்கு வாழ்ந்த கதையோடுதான் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் அமைந்திருக்கிறது. இல்லற வாழ்க்கையைக் களமாகக் கொண்ட பல நாவல்கள், சிக்கல்கள், துன்பங்கள், இறுதியில் இணைந்து நிம்மதியை நாடுதல் என்னும் மூன்று புள்ளிகளுக்கு இடையிலான உலகத்திற்குள்ளேயே உலவிவந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரைக்கும் இதுதான் நிலைமை. புத்தாயிரத்தாண்டில் நிலைமை சற்றே மாறத் தொடங்கியது.

Saturday 8 April 2023

சரிவின் சித்திரங்கள்


மலையாள மொழியின் முக்கியக் கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிக இளம் வயதிலேயே தம் கவிதைகளால் மலையாள உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டவர். கவிதைகள் அரங்கேறும் அரங்குகளை தம் வசீகரமான குரலால் வசப்படுத்திக் கொண்டவர். அரசியல் சார்பின் காரணமாக பதினெட்டு வயதிலேயே பெற்ற தந்தையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர். அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் தமக்குக் கிடைத்த அனுபவங்களில் சிலவற்றைப் பதிவு செய்த அவரது மலையாள நுால் கே.வி.ஷைலஜாவால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

நெம்புகோல் மேடை - கட்டுரை


பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய அதன் மதிலுக்கும்  ரயில் பாதைக்கும் இடைப்பட்ட நிழல் சூழ்ந்த பகுதி விளையாடுவதற்குப் பொருத்தமான இடம். ஆனால் அங்கே காலை, பகல், மாலை எல்லா நேரங்களிலும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அங்கே எங்களைப்போன்ற சிறுவர்கள் வேடிக்கை பார்க்கலாமே தவிர விளையாடமுடியாது.

இராஜேந்திர பிரசாத் : எளிமையும் பெருமையும்

 

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு காந்தியடிகள் வருவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே பீகாரைச் சேர்ந்த சம்பாரணில் அவுரி சாகுபடியின் விளைவாக விவசாயிகளின் வாழ்வில் துயரம் கவியத் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய அவுரிச் சாகுபடி விவசாயிகளின் வாழ்க்கையை சிறுகச்சிறுகச் சிதைத்து வதைத்தது.

Sunday 2 April 2023

சாம்பல் - சிறுகதை

 

“இது என்ன புது சடங்கா இருக்குது. எங்க தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா யாருக்குமே இப்படி செஞ்சதில்லை” என்றாள் சுந்தரி. “எரிச்சதுக்கு மறுநாள் பால் ஊத்தறதுக்கு சுடுகாட்டுக்கு போவாங்க. அங்க ஒரு பிடி சாம்பல எடுத்து ஒரு சொம்புல போட்டு துணியால மூடி கட்டிடுவாங்க. அப்பறம் நேரா சீறங்கப்பட்டணம் போயி கரைச்சிட்டு வந்துடுவாங்க. அதத்தான் நான் பார்த்திருக்கேன்”