Home

Tuesday 30 May 2023

ஒன்பது குன்று - கட்டுரை

 

எண்பதுகளின் பிற்பகுதியில் தொலைபேசித்துறையில் கோஆக்சியல் கேபிள் பாதை அமைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்தன. வனப்பகுதிகளும் மலைப்பகுதிகளும் நிறைந்த பல மாவட்டங்களை இணைக்க முடியவில்லை. முக்கியமாக ஹாசன், மங்களூர், சிக்கமகளூர், கார்வார், ஷிமோகா போன்ற பகுதிகளை இணைக்கமுடியாமல் திணறினோம். அந்த நேரத்தில் இரும்புக் கோபுரங்களைக் கட்டியெழுப்பும் மாற்றுத்திட்டம் உதித்தது.  

Sunday 28 May 2023

கசப்பில் கரைந்த இளைஞன் - கட்டுரை

 

     திருமணமாகாத இளைஞர்களுக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் மற்ற நகரங்களில் இருந்ததைப்போலவே பெங்களூரிலும் ஏராளமான சிரமங்கள் இருந்தன. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மறுப்பதற்கு முன்னரேயே தரகர்கள் மறுத்துவிடுவார்கள். சிற்றூர்களிலிருந்து நகரத்தைநோக்கி வருகிறவர்களாகட்டும், வேறு நகரங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்து வருகிறவர்களாகட்டும் அவர்களுக்காகவே சிற்சில இடங்களில் சில விடுதிகள் இயங்கிவந்தன. எட்டுக்குப் பத்தடியில் அடுத்தடுத்து வரிசைவரிசையாகக் கட்டப்பட்ட சின்னச்சின்னக் கூண்டுகள். ஒவ்வொன்றிலும் இரண்டு கட்டில்கள். ரயில் பெர்த்துகளைப்போல சிற்சிலவற்றில் நான்குகூட கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றை நோக்கித்தான் தரகர்கள்  அவர்களை வழிகாட்டுவார்கள். 

ஒரு துளியைச் சேமிப்பது எப்படி? - கட்டுரை

 

     இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் "சம்சாரா" என்னும் ஜெர்மானியப் படமொன்றைப் பார்க்க நேர்ந்தது. எல்லாப் பாத்திரங்களும் ஜெர்மானிய மொழியில் பேசினாலும் கதை முழுக்க இமயமலை அடிவாரத்தையொட்டிய லடாக் பகுதியிலேயே நடைபெறும் விதத்தில் அப்படம் அமைக்கப்பட்டிருந்தது. சில இந்தி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. படத்தை இயக்கிய இயக்குநரான பான் நலின் இந்தியத் திரைப்படங்களோடும் தொடர்புடையவர். ஜெர்மானிய நடிகர்களோடு ஓர் இந்திய நடிகையும் நடித்திருந்தார். தாஷி என்னும் இளம் புத்த பிக்குவின் வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களையும் தெளிவுகளையும் உணர்த்தும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. கதைப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் ஒரு கிராமத்துக்குச் செல்கிறான். அக்கிராமத்தின் நுழைவாயிலில் அடுக்கப்பட்டிருந்த கற்களில் பல வாசகங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு வாசகம்தான் "ஒரு துளியைச் சேமிப்பது எப்படி?" என்னும் கேள்வி.

Sunday 21 May 2023

கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை

 

கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறிச் சென்றுவிட்ட எருமையொன்று குழப்பத்தில் நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பி கண்ணாடிக்கோளம்போல மின்னும் கரிய விழிகளை உருட்டி ‘ம்மே’ என்று முதலில் சத்தமிட்டது. பிறகு, அதை நெருங்காமலேயே விலகி நின்றுவிட்ட என் திகைப்பை உணர்ந்து நான் அதனுடைய மேய்ப்பனல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற திசைகளின் பக்கம் தலையைத் திருப்பி பலவீனமான குரலில் மீண்டும்மீண்டும் ‘ம்மே ம்மே’ என்றது. அதன் கழுத்து வேகமாக அசையும்தோறும் மணியசைந்து ஓசை எழுந்தது.

விருப்பம் - கட்டுரை

  

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல் அந்தப் பந்து சிறிது தொலைவில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு அக்காவின் இடுப்பில்  இருந்த தண்ணீர்ப்பானையில் பட்டுத் தெறித்தது. அந்த வேகத்தில் பானை துண்டுதுண்டாக உடைந்துவிட, அவர் உடுத்தியிருந்த ஆடை முழுதும் தண்ணீரில் நனைந்துவிட்டது. அதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அச்சத்தில் நாங்கள் உடல்நடுங்க சிலையாக நின்றுவிட்டோம்.

Sunday 14 May 2023

ஒரே ஒரு அடி - கட்டுரை

 

”ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி……”

எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே தூக்கம் கலைந்துவிடும். ஆனாலும் கண்களைத் திறக்க மனமே வராது. கண்களை மூடிக்கொண்டு  கரகரப்பான அந்த ரேடியோ குரலில் மூழ்கியபடியே போர்வைக்குள் சுருண்டிருப்பேன்.

பக்தவத்சலம்: பெருமைகளும் தியாகங்களும்

  

இந்தியாவில் அரசு அமைப்புக்கு எதிரான சக்திகளைப்பற்றி ஆய்வு செய்ய பிரிட்டன் அரசு ரெளலட் என்னும் வெள்ளைக்கார நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை 1919ஆம் ஆண்டில் அமைத்தது. அக்குழு இந்தியாவெங்கும் பயணம் செய்து தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. அதையொட்டி, கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை அடக்குவதற்காக புதிய சட்டங்களை இயற்ற அரசு முனைந்தது. அரசின் நடவடிக்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் சத்தியாகிரக வழிமுறைகளைப்பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும் விதமாகவும் 14.03.1919 அன்று பம்பாய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காந்தியடிகள் உரையாற்றினார். அந்த உரை உடனடியாக எல்லாச் செய்தித்தாட்களிலும் வெளிவந்து, நாடெங்கும் அச்செய்தி வேகமாகப் பரவியது.

Sunday 7 May 2023

அய்யனார் - கட்டுரை

 

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ’கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான் நின்றிருந்தேன். அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அழுதுகொண்டே சென்று தன் அம்மாவிடம் நான்தான் அவனைக் கீழே தள்ளிவிட்டதாகச் சொல்லிவிட்டான். மறுகணமே அவன் அம்மா என் அம்மாவிடம் வந்து புகார் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த கணம் என்னிடம் எதையும் விசாரிக்காமலேயே தன் கோபத்தையெல்லாம் என்னை அடித்துத் தீர்த்துக்கொண்டார் என் அம்மா.

சம்மதங்கள் எங்கிருந்து பிறக்கின்றன...? - சிறுகதை

 

ஆங்கில எழுத்துக்களின் வரிசையின்படிதான் எங்கள் நாலாவது வகுப்பு அட்டன்டன்ஸ் புத்தகத்தில் பெயரெழுதி இருந்தார்கள். அடர்த்தியான பச்சை வர்ணத்தில் பைண்டிங் செய்த அந்த அட்டென்டன்ஸ் புத்தகத்தை பார்ப்பதற்கே மிரட்சியாய் இருக்கும். வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் செல்கிற வழியில்கூட இந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த கையோடு பயமும் சேர்ந்துவிடும். ஏற்கனவே அம்மாவும் ஆயாவும் சொன்ன கதைகளில் இருந்து எமனுக்கு அந்தரங்கக் காரியதரிசியான சித்ரகுப்தன் பற்றியும் அவன் சகல நேரங்களிலும் சுமந்த ஜனன மரணப் பதிவேடு பற்றியும் ஒரு உருவம் எனக்குள் திரண்டு உருவாகி இருந்தது. அந்த உருவத்தையும் அட்டன்டன்ஸ் புத்தகத்தையும் சம்பந்தப்படுத்திப் பார்த்துப்பார்த்து மனசுக்குள் ஒரு கலக்கத்தை உருவாக்கிக்கொண்டேன்.