Home

Wednesday 26 May 2021

மாபெரும் சமூகக் கனவுகள் (வெட்டவெளி வார்த்தைகள் – கன்னட வசனங்கள் அறிமுகம்)

 

கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ்த்தட்டைச் சார்ந்த அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்தது இந்த இயக்கம். தமக்குள் எவ்விதமான பேதமில்லை என்பதன் குறியீடாகவும் தாம் சாதியப் பார்வைகளைக் கடந்தவர்கள் என்பதன் அடையாளமாகவும் அவர்கள் லிங்கத்தை அணிந்தனர். லிங்கத்தை அணிந்தவர்கள் அனைவரும் சரணர்கள். சாதிய அடையாளம் என்பது முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அனைவரும் சிவனையே தன் முழுமுதல் இறைவனாக எண்ணிச் சரணடைந்தவர்கள். பக்தியுடன் உழைப்பு இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த தளம் உருவானது. உழைப்பில் சிவனுடைய வடிவத்தைக் கண்டவர்களுக்கு உழைப்பின் களமான வயலே ஆலயமானது. அந்த வயலில் சிவனை அவர்கள் குடியேற்றிக் கொண்டாடினார்கள். 

அக்கமகாதேவியின் வசனங்கள் - புத்தக அறிமுகக்கட்டுரை

 

கன்னட வசன இலக்கியத்தில் முக்கியமான ஒரு பெயர் அக்கமகாதேவி. அல்லமப் பிரபு, அக்கமகாதேவி, பசவண்ணர், மடிவாளர் என ஒரு பெரிய நீண்ட வரிசையே உண்டு. இவர்கள் அனைவரும் வசனகாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வனுபவங்களையும் ஆன்மிக அனுபவங்களையும் முன்வைத்து அவர்கள் மொழிந்தவற்றுக்கு வசனங்கள் என்று பெயர். பாட்டுத்தன்மை மிகுந்த வசீகரமான பேச்சுமொழியால் அமைந்தவை இவ்வசனங்கள். சிற்றெறும்பும் சிவமாகும் என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டு. இடைவிடாமல் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் சிற்றெறும்புகூட ஒருநாள் சிவனாக மாறமுடியும். நம்பிக்கையும் பற்றும் ஈடுபாடும் நெகிழ்ச்சியும் தன்னையே அர்ப்பணிக்கிற குணமும் எல்லாவற்றையும் துறந்து சரணடைகிற மனமும் வாய்க்கப்பெற்றவர்களுக்கு சிவனருள் சாத்தியம். சிவன் வெறும் இறையுருவம் மட்டுமல்ல. அவன் நல்ல தோழன். நல்ல வழிகாட்டி. நல்ல ஆசான். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிற சக்தி.

Sunday 23 May 2021

சங்கராபரணி - சிறுகதை

  

சாலையிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி கடையை நோக்கி வந்த சிறுமி முயல் உருவத்தில் நின்றிருந்த மகாதேவனைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒவ்வொரு படியையும் கடக்கும் போது அவள் சொல்லிக்கொண்டு வந்தஜேக் அண்ட் ஜில் வெண்ட் அப் ட் ஹில்பாட்டு சட்டென்று நின்றது, அதே கணத்தில் அவள் முன்னால் முயலைப்போல தாவிவெல்கம் டு மங்களா டெக்ஸ்டைல்ஸ்என்று மகாதேவன் சொன்னதும் அச்சத்துடன் ஒரு அடி பின்வாங்கி, பின்னால் வந்துகொண்டிருந்த தன் அப்பாவின் கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். மெல்ல மெல்ல ஆச்சரியமும் புன்னகையும் அவள் முகத்தில் படிந்தன. “அப்பா, இந்த முயல்குட்டி பேசுதுப்பாஎன்று தன் அப்பாவின் காலோடு ஒட்டிக்கொண்டாள்.

முறிமருந்து - சிறுகதை

  

தோட்டத்தில் நின்றிருக்கும் தென்னைமரத்தடியிலிருந்து பின்வாசல் வழியாக கூடத்தைக் கடந்து முன்வாசலை ஒட்டியிருந்த அம்மாவின் ஆப்பக்கடைக்கு வந்து சேர்ந்தாள் ஆயா. புதிதாக தைத்து கழுவி எடுத்துவந்த மந்தாரை இலைக்கட்டையும் தேக்கு இலைக்கட்டையும் அம்மாவிடம் கொடுத்தாள். அடுப்பைவிட்டு விலகி சிறிது தூரத்தில் உட்கார்ந்தபடி நான்கு பேர் தோசை தின்றுகொண்டிருந்தார்கள்.

என்ன சொல்லிட்டு போறான் ஒன் ஊட்டுக்காரன்? காலயிலயே இவ்ளோ சத்தம்? என்ன கவலயாம் அவனுக்கு?” ஆயா அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். “எல்லாம் புள்ளய பத்திய கவலைதான்என்றபடி ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தாள் அம்மா. “மத்த புள்ளைங்களாட்டம் ஒழுங்கா படிச்சமா பாஸ் பண்ணமானு இல்லாம ஒரே க்ளாஸ்ல நாலு வருஷமா தேச்சிகினு ஒக்காந்திருந்தா யாருக்குத்தான் கோவம் வராது?”

Sunday 16 May 2021

புதிர்களின் களம்

 

வளவ.துரையன் என்கிற .சுப்பிரமணியன் வளவனூர் என்னும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். மரபிலக்கியத்தில் தோய்ந்தவர். கம்பராமாயணத்தையும் திருப்பாவையையும் முன்வைத்து எண்ணற்ற மேடைகளில் உரையாற்றியவர். மரபுக்கவிதைகளை எழுதுவதில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவர் மனம் நவீன இலக்கியத்தை நோக்கித் திரும்பி, புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமைகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்றார். இரண்டாவது மதகு அவருடைய இரண்டாவது நாவல்.

துரையனார் அடிகள் : மனசாட்சியின் பாதை - கட்டுரை

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்ற ஆங்கில அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியது. 1906இல் ஆப்பிரிக்காவில் ஆசியர்களின் இருப்பை உயிர்நிலைகளை ஆழமாக அரித்துக் கொல்லும் புற்றுநோய்க்குச் சமமான ஒன்றாக ஒப்பிட்டு தம் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டினார் ஜெனரல் ஸ்மட்ஸ். அவர் கொண்டுவர நினைத்த அவசரச் சட்டத்தின் நகல் ட்ரான்ஸ்வால் அரசாங்க கெஜட்டில் பிரசுரமானது. தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியரின் வாழ்க்கையை அது கேள்விக்குறியாக்கியது. அந்த நகல் சட்டசபையால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகாதபடி அரசின் முயற்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சத்தியாகிரக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார் காந்தியடிகள்.

Wednesday 12 May 2021

கடிதம் - சிறுகதை

 

 வணக்கம். என் சொந்த விஷயங்கள் மற்றும் என்னைக் குதறி எடுக்கிற சில பிரச்சினைகள் தொடர்பாக இக்கடிதத்தை மேன்மைபொருந்திய தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

என் பெயர் செல்லதுரை. பிறந்த தேதி 22.4.64. தந்தையார் பெயர் ராஜாங்கம். தாயார் பெயர் செல்லத்தாயி. தற்சமயம் இருவருமே உயிருடன் இல்லை. நான்கு வருஷத்துக்கு முன்பு தந்தையும் அடுத்து ஆறுமாத வித்தியாசத்திலேயே என் தாயாரும் என்னையும் எனக்குக்கீழ் இன்னும் இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகளையும் தவிக்கவிட்டு இறந்துவிட்டார்கள். பிரச்சினையே இந்த இடத்தில்தான் ஆரம்பம். இப்படிச் சொல்வதால் இதற்கு முன்பு பிரச்சினைகளே இல்லை என்கிற அர்த்தம் கிடையாது. உடம்போடு ஓடுகிற ரத்தம்மாதிரி எங்கள் குடும்பத்தோடு ஒட்டியது பிரச்சினை. சதாகாலமும் அது பிடுங்கித் தின்னத்தான் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் எடுத்துக்கொண்டு தங்களுக்குத் தெரியப்படுத்தவும் நியாயம் கேட்கவும் இவ்வளவு நீளமாய் மடல் எழுத முனைகிற அவசியம் கிடையாது. நான் எழுத வருவது வேறு ஒரு பிரச்சினை. என் தந்தையார் மறைவுக்குப் பின் எனக்குண்டான வாழ்க்கைப் பிரச்சினை.

காமராஜர் : மண்ணில் பொழிந்த மாமழை

 

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல புரட்சி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒருசில இடங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அதனால் புரட்சி இயக்கங்களை ஒடுக்கும் வழிவகைகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆங்கில அரசு சிட்னி ரெளலட் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் புதியதொரு சட்டத்தை 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கருதும் எவரையும் அரசு எவ்விதமான வழக்கு விசாரணையுமின்றி கைது செய்து இரண்டாண்டுகள் வரைக்கும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் வழிவகுத்தது.

Tuesday 4 May 2021

நினைவில் நிறைந்த மனிதர்கள் - கட்டுரை

  

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் கல்கி. தம் வாழ்வின் தொடக்க காலத்திலிருந்தே காந்தியக்கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் அவர். கதரணிந்தவர். திருச்செங்கோட்டில் இருந்த இராஜாஜியின் ஆசிரமத்தில் தொண்டாற்றியவர். மதுவிலக்குக் கொள்கையை தமிழகமெங்கும் பரப்பும் நோக்கத்துடன் இராஜாஜி தொடங்கிய விமோசனம் பத்திரிகைக்கு  ஆசிரியராக இருந்தவர். திரு.வி. நடத்தி வந்த .தேசபக்தன் இதழில் சிறிது காலம் பணிபுரிந்தவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு மூன்றுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டவர்.