Home

Friday 25 January 2019

எங்கள் ஊரில் சவண்டல்மரம் இல்லை - கட்டுரை





வீரமுத்துவின் கண்கள் எங்கோ மறைந்துநின்றபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற எண்ணத்தை ஒரு நம்பிக்கைபோல ஐம்பதாண்டு காலமாக என் மனத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் சட்டென்று என் முன்னால் தோன்றி என் தோளைத் தொட்டு அவன் அழுத்துவான் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து என்னால் ஒரு கணம் கூட விடுபட முடிந்ததில்லை.

கதவு திறந்தே இருக்கிறது






முன்னுரை

நான் பிறந்து வளர்ந்த சிற்றூரான வளவனூரில் ஏரிக்கரைக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையில் நானூறு ஐந்நூறு அடி இடைவெளி இருக்கும். எண்ணற்ற மரங்களால் அடர்ந்த இடம். ஆலமரம், அரசமரம், இலவமரம், வேப்பமரங்கள் என அங்கே இல்லாத மரங்களே இல்லை. காற்றுக்கும் நிழலுக்கும் பஞ்சமே இல்லாத இடம்

Sunday 13 January 2019

கோடுகள் - கட்டுரை




எனக்காக என் நண்பர் தனது புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்த புத்தகமே வேறு. ”ஒரு நிமிஷம், இதை பிடித்துக்கொள்ளுங்கள்என்று சொல்லி என்னிடம் கொடுத்த புத்தகமே வேறு. படங்கள் நிறைந்த புத்தகம் என்பதால் ஆர்வத்தில் புரட்டத் தொடங்கினேன்.

மூன்று முகங்கள் - கட்டுரை




பேருந்திலிருந்து இறங்கும்போது நினைவுக்கு வரவில்லை. அருகிலிருந்த வங்கி .டி.எம்.மில் பணமெடுத்துக்கொண்டு வெளியே வந்தபோதும் நினைவுக்கு வரவில்லை. எதிர்பாராமல் என்னைக் கடந்துபோன தள்ளுவண்டியில் நாவல்பழக்குவியலைப் பார்த்துவிட்டு பொங்கிய ஆசையில் அரைகிலோ வாங்கிக்கொண்டு திரும்பியபோதும் நினைவுக்கு வரவில்லை. அதற்குப் பிறகு நாலைந்து குறுக்குச்சாலைகளைக் கடந்து முன்னும்பின்னுமாக நகர்கிற வாகனங்களின் ஊடே புகுந்து எங்கள் தெருவுக்குள் நுழைந்து நடக்கத் தொடங்கியபோதுதான் சட்டென நினைவுக்கு வந்தது.

சிட்டுக்குருவியின் வானம் - கட்டுரைத்தொகுதி






முன்னுரை

இது ஒரு நினைவுத் தொகுப்பு. எந்த நோக்கமும் இல்லாமல் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு மின்னல்போல மின்னி மறைந்தவை. ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இதற்குக் கிடையாது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு விர்ரென்று தாவிப் பறந்துபோன குருவியைப்போல அவை கடந்துபோய்விட்டன.