Home

Sunday 21 February 2021

விலை - சிறுகதை

 

சிறைக்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. மனசின் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஒவ்வொரு நரம்பிலும் வெறி பீறிட்டோடுகிறது. போன மாதம் வரை இப்படி ஒரு சந்தர்ப்பம் என் வாழ்வில் நேரும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை. ஆற்றில் ஒரு படகுப்பயணம்போல அமைதியாகவும், ஆனந்தமாகவும் கழிந்து கொண்டிருந்தது என் வாழ்வு. அன்பே உருவான பத்மினி. குறும்பின் உறைவிடமான மஞ்சுக் குட்டி. உலகத்தில் என்னைப்போல சந்தோஷசாலி எவன் இருப்பான் என்ற நினைப்பில் மிதந்தபடி இருந்தேன்.

வாகனம் - சிறுகதை


இரண்டு வருஷங்களாகக் காலையிலும் மாலையிலும் என்னோடு வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டிருந்த டெலிபோன் தொழிற்சாலைக்காரர் காலிசெய்துவிட்டுப் போய் மொத்தமாய் ஆறுமணி நேரம்கூட கடந்திருக்கவில்லை. அதற்குள் பக்கத்து வீட்டுக்குப் புதுக்குடித்தனம் வந்துவிட்டது. முதலில் ஒரு ஆட்டோ வந்தது. இரண்டு பெண்களும் ஓர் இளைஞனும் இறங்கினார்கள். இளைஞன் மட்டும் ஓனரின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டிச் சாவியை வாங்கி வந்து கதவைத் திறந்தான். பெண்கள் உள்ளே சென்றார்கள். 

Saturday 13 February 2021

அறையில் மிதக்கும் ஒளி - புத்தக அறிமுகக்கட்டுரை

  

நினைவென்னும் ஆழியில் அலையும் கயல்களுக்கும் ஏரிகளிலும் ஆறுகளிலும் அலையும் உண்மையான கயல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் வசீகரமானவை. உண்மையான கயல்கள் முட்டையிலிருந்து, குஞ்சாக வெளிவந்து, வளர்ந்து, நீந்தி விளையாடி, நொடிநேர அரைவட்டத்தில் நீருக்கு வெளியே இருக்கிற உலகத்தைப் பார்த்து, முட்டையிட்டு, இனத்தைப் பெருக்கி, முதுமையடைந்து மறைந்துபோகின்றன. ஆனால் நினைவென்னும் ஆழியில் அலையும் கயல்களோ பிறப்பு இறப்புக்கணக்குக்கு அப்பாற்பட்டவை. அவை எப்போதுமே நீந்தி விளையாடும் கயல்கள். கனவுகள். காட்சிகள். எண்ணங்கள். சொன்ன சொற்கள். சொல்ல நினைத்த சொற்கள். நினைக்க நினைக்க களிப்பூறும் அபூர்வமான தருணங்கள் எல்லாம் கயல்களே. ரவிசுப்பிரமணியன் தம் நெஞ்சில் படிந்திருக்கும் அபூர்வத் தருணங்களையே கயல்களாக தம் கவிதைகளில் உருமாற்றி முன்வைத்திருக்கிறார்.

கக்கன் : விலைமதிக்க முடியாத இரத்தினம் - கட்டுரை

 

தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்துக்காகவும் அரிஜன நல நிதி திரட்டுவதற்காகவும் 1934 ஆம் ஆண்டு தொடங்கியதும் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார். முதலில் கேரளப்பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 25.01.1934 அன்று  இரவு மதுரைக்கு வந்து சேர்ந்தார். காந்தியத் தொண்டரான என்.எம்.ஆர்.சுப்பராமனுடைய வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் 26.01.1934 அன்று அவர் மதுரை நகராட்சி ஊழியர்களிடையில் உரையாற்றினார். அப்போது நகராட்சியின் சார்பில் காந்தியடிகளுக்கு ஒரு வரவேற்பு மடல் படித்தளிக்கப்பட்டது.  மதுரையின் நகரப்பகுதிகளைப் பராமரிப்பதைப்போலவே தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடியிருப்புபகுதிகளையும் நகராட்சி ஊழியர்கள் அக்கறையோடு பராமரிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tuesday 2 February 2021

யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் - புத்தக அறிமுகக்கட்டுரை

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம்  இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில் வந்தபடி இருந்தன. அவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

செவ்வியல் கணங்கள் - புத்தக அறிமுகக் கட்டுரை


பாரதிமணி மிகச்சிறந்த உரையாடல்காரர். ஒரு நிகழ்ச்சியை அவர் விவரிக்கும்போது, ஒவ்வொன்றும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோலவே துல்லியமாக இருக்கும். புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்னும் தலைப்பில் அமைந்த நூலில் அவர் தன் அனுபவங்களின் சித்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். பழகிய மனிதர்களைப்பற்றியும் பழகிய சூழலைப்பற்றியும் அவர் தீட்டிக்காட்டியிருக்கும் சொல்லோவியங்களைப் படித்ததும் அந்த மனிதர்கள் நாமறிந்த மனிதர்களாகவும் அந்தச் சூழல் நாமும் அறிந்த சூழலாகவும் மாறிவிடுகிறது. அவருடைய தேர்ந்தெடுத்த சொற்கள் வழியாக மனிதர்களையும் சூழலையும் சிந்தாமல் சிதறாமல் மறுஆக்கம் செய்துகொள்ள முடிகிறது. எந்த இடத்திலும் குறை என்றோ மிகை என்றோ தோன்றியதே இல்லை. அவருடைய சொற்கள் கச்சிதமாக உள்ளன. பாரதிமணி தன் ஒவ்வொரு நூலிலும்நான் ஒரு எழுத்தாளனல்லஎன்னும் வாசகத்துக்கு அழுத்தம் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளராக இல்லாத ஒருவருக்கு இந்த ஆற்றல் எப்படி கைவந்த கலையாக மாறியது என்பது முக்கியமான கேள்வி.