Home

Tuesday 30 June 2020

மணம் - சிறுகதை



தெருமுனை திரும்பும்போதே ஆட்டோக்காரரிடம்அதோ, அந்த  ஷாமியானா போட்ட ஊட்டுங்கிட்ட நிறுத்திக்குங்கஎன்று சொன்னார் சக்திவேல் அண்ணன். ஆட்டோ வேகத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்து வீட்டுக்கருகில் வந்து நின்றது. முதலில் சிதம்பரமும் நானும் இறங்கினோம். சக்திவேல் அண்ணன் மெதுவாக இடதுகாலை முதலில் ஆட்டோவுக்கு வெளியில் தரையில் வைத்து ஊன்றிக்கொண்டு வெளியே வந்து வலது காலை எடுத்துவைத்தார். வழவழப்பான உலோகக்காலின் கருமை ஒருகணம் வெளிப்பட்டு மறைந்தது. என் தோளில் கைவைத்து அழுத்தியபடி அடியெடுத்து வைத்து சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தார்.

ஆயிரம் ரூபாய் - சிறுகதை



அனுஷா தென்னைமரத்தில் முகத்தை அழுத்திவைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு மூன்று எண்ணத் தொடங்கியதுமே  இளமதியும் சந்தோஷும் வைக்கோல்போர் பொந்துக்குள் ஒளிந்துகொண்டார்கள். உமாதேவி சுவருக்குப் பின்னால் இருக்கும் கோழிக்கூடைக்குள் மறைந்துகொண்டாள். சசிதரன் தேங்காய் மூட்டைக்குப் பக்கத்தில் முகம் தெரியாதபடி அமர்ந்துகொண்டான். கனகாம்பரம் பூத்திருக்கும் செடிகளுக்கு நடுவில் சென்று சத்தம் காட்டாமல் உட்கார்ந்துகொண்டேன் நான்.

Wednesday 24 June 2020

தனிவழி - 2 - சிறுகதை


பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார். ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்து ஒரு துண்டு கற்பூரத்தை எடுத்து பிள்ளையாருக்கு முன்னால் வைத்து ஏற்றினாள். தீபம் சுடர்விட்டு எரியும்போது அனைவரும் கண்மூடி வணங்கினார்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் ஒவ்வொருவராக பிள்ளையார் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு இறங்கி நடந்தார்கள். ”ரொம்ப நன்னா பாடறேள். கேக்கறச்சே பகவானே பக்கத்துல வந்து நின்னாப்புல தோணித்து. மனசு அப்படியே அடங்கி சாந்தமாய்டுத்து. தட்டாம இத நீங்க வாங்கிக்கணும்என்றபடி ருக்மிணி மாமி தன் பையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து பாட்டுக்காரரிடம் கொடுத்தார். பாட்டுக்காரர்  அதை புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டார். கிழங்குக்கார ஆயா, கூடையில் எஞ்சியிருந்த கிழங்குகளை ஒரு மந்தாரை இலையில் வைத்து எடுத்து வந்து பாட்டுக்காரரிடம் கொடுத்தாள். அவர் அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். எங்களைத் தவிர ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினார்கள்.

தனிவழி - 1 - சிறுகதை



நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டாஎன்று பொருமினான் சிவலிங்கம். “புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடிச்சி இன்னைக்கு அவன் கொட்டத்த அடக்கணும்
எங்களை எச்சரித்துவிட்டு உத்திக்குழிக்கு நேராக இருபதடி தொலைவில் உறுதியாக நின்றான் சிவலிங்கம். கிரிதரன் இலுப்பை மரத்தின் திசையில் நகர்ந்து சென்றான். தண்டபானி கள்ளிச்செடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். பெருமாள் கோவில் மதிலுக்கு அருகில் போய் நின்றான் வடிவேலு. நான் அரசமரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த மண்மேடைக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.

உத்தமன் கோவில் - சிறுகதை



நான் என்னுடைய பி.எஸ்.. சைக்கிளை தென்னந்தோப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கட்டுமரத்தில் சாய்த்து நிறுத்தி பூட்டிவிட்டு திரும்பியபோது இன்னும் மறையாத நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை மணற்பரப்பு சர்க்கரைபோல பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அலைகள் பொங்கியெழுந்து வந்து கரையைத் தொட்டுத் திரும்பும்போதெல்லாம் ஒரு நீளமான பூச்சரத்தை இழுத்துவந்து ஒதுக்குவதுபோலத் தோன்றியது.  தோப்பிலிருந்து ஒரு நாய் வேகமாக ஓடி வந்து எனக்குப் பக்கத்தில் வந்து நின்று நிமிர்ந்து பார்த்தது. ”என்னடி செல்லம், ரெண்டு நாளா ஆளக் காணமேனு பாக்கறியா? இதோ வந்துட்டேனே, அப்பறம் என்ன?” என்றபடி குனிந்து அதன் கழுத்தைத் தொட்டு தடவிக்கொடுத்தேன். என் கையிலேயே சில கணங்கள் தலைசாய்த்துவிட்டு முனகலுடன் விலகி ஓடியது நாய்.

Thursday 18 June 2020

கசப்பின் சிறுதுளி - கட்டுரை



பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோஎன்பது சிவவாக்கியரின் வரி. அதுமனிதர்களிடையில் வேறுபாடில்லைஎன்பதை உணர்த்தும் ஞானவாக்கியம். பதினெண்சித்தர்களில் ஒருவர் அவர். சாதிசமய வேறுபாடுகளைப் பெரிதென நினைக்கும் பித்தர்களைச் சாடியவர். மொழி வேறுபாடு, இனவேறுபாடுகளப் பெரிதெனப் பேசித் திரிகிறவர்கள் கேட்டு மனம் திருந்துபவர்களுக்காக சொல்லப்பட்டதாகவும் நாம் இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று சொன்ன மகாவாக்கியத்தின் மற்றொரு வடிவமே இது.

கடிதங்கள் என்னும் கண்ணாடி - கட்டுரை



1966-1977, 1980-1984 ஆகிய இரு காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம் என்னும் கேள்வியிலிருந்து தொடங்கலாம். வங்கிகளை நாட்டுடைமையாக்கியவர், மன்னர் மானியங்களையும் சலுகைகளையும் ஒழித்தவர், பங்களாதேஷ்  உதயத்துக்காக பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர், தேசம் தழுவிய நெருக்கடி நிலையை அறிவித்து கட்சி பேதமின்றி தம்மை எதிர்த்தவர்கள் அனைவரையும் விசாரணையின்றி சிறையில் அடைத்தவர், பொற்கோவில் வளாகத்துக்குள் ராணுவ நடவடிக்கையை அனுமதித்தவர் என்னும் விடைகளையே பெரும்பாலானோர் சொல்லக்கூடும். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஆனால் அவற்றையெல்லாம் கடந்த இன்னொரு உண்மை உண்டு. அது அவர் ஒரு மிகச்சிறந்த இயற்கையார்வலர் என்பதும் இந்தியாவின் இயற்கைவளத்தைக் காப்பாற்ற அவர் முனைப்போடு பாடுபட்டார் என்பதுமான உண்மை.

Wednesday 10 June 2020

கிருஷ்ண ஜெயந்தி - சிறுகதை




டேய், போடறத ஒழுங்கா புடிக்கணும் தெரிதா?” என்றேன். ”கொஞ்சம் ஏமாந்தாலும் உருண்டுபோய் சாக்கடையில உழுந்துரும்
அடங்கிய குரலில் எச்சரித்துவிட்டு குனிந்தவாக்கில் அடிமேல் அடிவைத்து மெதுவாக மதிலோரமாகவே சென்றேன். கற்கள் இடிந்துவிழுந்த நிலையில் உயரம் குறைவாக இருந்த புள்ளியில் தாவியேறி, அந்தப் பக்கமாக வளைந்து தாழ்ந்திருந்த மாமரத்தின் கிளையில் தொற்றி இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்தேன். பிறகு அங்கிருந்தே மாங்காய்கள் தொங்கும் இடத்தை அடையும் வழியைத் திட்டமிட்டு ஒவ்வொரு அடியாக நகர்ந்தேன். சில நிமிடங்களில் மாங்காய் கைக்கு எட்டும் தொலைவுக்கு வந்துவிட்டேன்.

கண் திறக்கவில்லை - சிறுகதை




நடுக்கூடத்துக்கு வந்து நின்றுபெட் நெம்பர் 112 ஆளு யாரு?” என்று சத்தம் போட்டுக் கேட்டபடி அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள் நர்ஸ். குடத்தை வைத்திருப்பதைப்போல இடுப்பில் க்ளிப் போட்ட அட்டையை வைத்திருந்தாள். மின்விசிறிக் காற்றில் அட்டையில் பொருத்தப்பட்டிருந்த தாள்கள் படபடத்தன.

Thursday 4 June 2020

பழி - சிறுகதை



பொம்மைக்காரரின் சித்திரத்தை ஞாபகத்தில் இருந்து அழிப்பது சுலபமான காரியமல்ல. அவர் உருவாக்கிய சிலைகள் ஊர் முழக்க இருந்தன. சத்திரத்தில் அண்ணா. கொஞ்சம் தள்ளி காந்தி பூங்காவில் காந்தி. காமராஜர். நேரு. பக்கத்தில் பதினெட்டுப் படிகளின் உச்சியில் ஐயப்பன். துரோபதை அம்மன் கோயிலின் சுற்றுச்சுவரில் ஏகப்பட்ட சிறுசிறு சிலைகள். தேவர்கள். தவசிகள். சிவன். பார்வதி. பிரும்மா. அர்ஜுனன். தேரோட்டும் கிருஷ்ணன். வாசல் யாளிகள். எல்லாமே அவர் கைவண்ணம். வர்ணம் பூசப்பட்ட பழைய நூற்றாண்டுச் சிற்பங்களோ என்று பார்க்கிற கண்களைத் தடுமாற வைத்து கணத்தில் ஏமாற்றிவிடும் அவை. கற்சிற்பங்களின் நேர்த்தியையும் நளினத்தையும் குழைத்த சிமெண்ட் சாந்துவின் மூலம் அவர் கைகள் கொண்டு வந்திருந்தன. 

அழிவும் அல்லலும் - கட்டுரை




11.03.2011 அன்று ஜப்பானில் ஃபுக்குஷிமா நகரில் ஒரே சமயத்தில் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து கடற்கரை ஓரமாக மின்சார உற்பத்திக்காக அமைக்கப்பட்டிருந்த நான்கு அணு மின்உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.