Home

Showing posts with label சு.வேணுகோபால். Show all posts
Showing posts with label சு.வேணுகோபால். Show all posts

Sunday, 19 April 2026

வாழும் தமிழ் : நியூயார்க் இலக்கியத் திருவிழா 2026

  

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப்  பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.

Sunday, 23 November 2025

சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்

 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில் தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்தி ஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாக எழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.

Tuesday, 16 October 2018

எத்தனை எத்தனை மனிதர்கள் - சு.வேணுகோபால் சிறுகதைகள்



தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தது. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்