என் மனைவியின் தங்கை
குடும்பம் வேலூரில் இருந்தது. அவர்களுக்கும் அங்கிருந்த ஒரு சித்த
மருத்துவருக்கும் நல்ல பழக்கம். அவரைப்பற்றி ஒவ்வொருமுறையும் தொலைபேசியில் அவர்கள்
சொன்ன தகவல்கள் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தைத் து¡ண்டியது. தொடர்ச்சியான பல அலுவலகப் பயணங்களாலும் வேலைச்சுமைகளாலும் வேலு¡ருக்குத் திட்டமிட்டிருந்த பயணம் தள்ளித்தள்ளிப் போனது. வருகிறேன் என்று சொன்ன
தேதிக்கு மாறாக மூன்று மாதம் கழித்துத்தான் செல்லமுடிந்தது. நான் சென்ற நேரத்தில்
மருத்துவர் ஊரில் இல்லை. அருகிலிருந்த ஏதோ ஒரு கிராமத்தில் நோயாளிகளைக்
காண்பதற்காகச் சென்றிருப்பதாகவும் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில்
வந்துவிடுவாரென்றும் தொலைபேசியில்
சொன்னார்கள்.
Sunday, 20 May 2018
ஏழு அதிசயங்கள்- கட்டுரை
காட்சி ஊடகத்
தொடர்பியலைப் பாடமாக நடத்தும் ஆசிரியர் ஒருவருக்கும் எனக்கும் நெருக்கமான
தொடர்புண்டு. கிட்டத்தட்ட பத்தாண்டு காலப் பழக்கம். உற்சாகம் கொப்பளிக்கப்
பேசுகிறவர். மரங்கள், பறவைகள்பற்றி ஏராளமான பல
தகவல்களைத் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பவர். ஒருமுறை மாலைநடை வேளையில்
ஏறத்தாழ அறுபது பறவைகளின் பெயர்களையும் அவற்றின் வடிவமைப்பையும் குரலமைப்பையும்
அவர் சொன்னதை மனம் சிலிர்க்கக் கேட்டுக்கொண்டிருந்த அனுபவம் என் வாழ்வில்
மறக்கமுடியாத சம்பவம். வாட்டம் என்பதே
என்னவென்று அறியாதவை அவருடைய பேச்சும் குரலும். பத்து நிமிடம் அவரோடு
பேசிக்கொண்டிருந்தால் போதும், பத்து நாட்களுக்குத்
தேவையான ஊக்கம் தானாகவே அவரிடமிருந்து நம்மைத் தொற்றிக்கொள்ளும்.
Friday, 11 May 2018
காரணம் - கன்னடச்சிறுகதை - விக்ரம் ஹத்வார
கடலலைகளின் நடனக்கோலத்தைக் கண்டு கரைந்துபோன சூரியன். பாதையெங்கும்
செம்மண் சேறு. பாதையின் இடதுபக்கத்தில் விளைந்து நிற்கும் வயல்வெளிகள். வயல்வெளிக்கு நடுவில் நீண்டு செல்லும் ஒரு சின்னப் பாதை. பாதையோரத்தில் மேகத்தைத் தொட்டுவிடுவதுபோல உயர்ந்து நிற்கும் மரங்களின் வரிசை. மரங்களை ஒட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். அங்கிருந்த மொத்த சூழலே காவி உடுத்திய தெய்வாம்சம் பொருந்திய துறவியைப்போல காணப்பட்டது. காயம்மா மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டிருந்தார். முதுகு சற்றே வளைந்திருந்தது. ஆனால் கூனலில்லை. நெற்றி மீது இழுத்துவிடப்பட்டிருந்த புடவை முந்தானை காற்றில் சரிந்தபோதெல்லாம் இழுத்துத் தடுத்தபடி இருந்தார்.
பறவையாகவும் குஞ்சாகவும் - கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’
மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை மேலும் அதிகமாக்கியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகள் கழித்து
நிர்மால்யாவின்
மொழியாக்கத்தில்
அந்த நூல் தமிழ்வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. சொந்த அனுபவம் சார்ந்து கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் முன்னுரை இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நிர்மால்யாவின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது.
Labels:
கமலாதாஸ்,
சுகுமாரன்,
நிர்மால்யா
Subscribe to:
Posts (Atom)