Home

Tuesday, 26 April 2016

வரலாற்றில் வாழ்வது


சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன் கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் தகவலும் தெரியாமலேயே அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அவர் சாலையோரமாக நின்றிருக்கிறார்.

Saturday, 16 April 2016

வஞ்சினங்களின் காலம் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)




வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு. அது நெருங்கி வருபவர்களையும் எரித்துப் பொசுக்கும். வைத்திருப்பவர்களையும் எரித்துப் பொசுக்கும்.

Wednesday, 6 April 2016

வீடு (சிறுகதை)


உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து மணிமுடி வரைக்கும் அவன் பார்வை மெதுவாகப் படர்ந்து உயர்ந்தது. அக்கணத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து ராமாயி பெரியம்மாவை அழைத்துவர வேண்டும் என்பது நினைவிலெழுந்தது.