மகிழ்ச்சி என்பது மனம்சார்ந்ததா அல்லது வசதிகள்சார்ந்ததா என்பது முக்கியமான கேள்வி. வசதிகள் மிகுந்த இருக்கை, படுக்கை, இருப்பிடம், தோட்டம், வாகனங்கள், மாளிகைகள் என எதை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடமுடியும். ஆனால் மகிழ்ச்சியை எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாது. மெத்தையைத்தான் வாங்கமுடியும், தூக்கத்தை எப்படி விலைகொடுத்து வாங்கமுடியும்? வசதிக்குறைவு என்பது சிற்சில வருத்தங்களுக்கும் சிரமங்களுக்கும் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அது மகிழ்ச்சி இல்லாமல்போவதற்கான காரணமாக இருக்கமுடியாது.
Tuesday, 26 September 2017
நிம்மதியைக் குலைக்கும் அமைதி - மு.சுயம்புலிங்கத்தின் "தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்"
சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள்தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்மேல் பாதையோரங்களில் வசிப்பவர்கள். யாருக்கும் முறையான தங்குமிடம் இல்லை. பலருக்கு உடல்மறைக்கும் துணிகள் இல்லை. பசிவேளைக்கு போதுமான உணவில்லை. கிடைக்கும்போது சாப்பிட்டு, கிடைக்கிற கிழிசலை அணிந்து, கிடைக்கிற இடத்தில் தூங்கி நாட்களை ஓட்டுகிறார்கள். கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள். கிடைக்கிற பணத்தை விருப்பம்போல செலவு செய்கிறார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கைமுறை. யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதற்கும் வழியில்லாத வாழ்க்கைமுறை என்றும் சொல்லவேண்டும்.
Tuesday, 12 September 2017
காலம்காலமாக நீளும் கனவுகள்- சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்துஸ்தானிக்கலைஞர் ஹானகல் கங்குபாய் சமீபத்தில் மறைந்ததையொட்டி எல்லா இதழ்களிலும் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகள் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் இருந்த நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டியிருந்தன. கங்குபாய் சிறுமியாக இருந்தபோதே இசையில் ஆர்வமுடன் விளங்கினார். கங்குபாயின் தாயார் மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர். தாயின் செல்வாக்கு சிறுமியின் உள்ளத்தில் படிந்திருக்கக்கூடும். அதனால் சின்ன வயதிலேயே அவரும் இசையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மகளுடைய இசையார்வம் தாய்க்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. கர்நாடக இசையின் பாதையில் தன்னையும் கடந்து மகள் செல்லவேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது.
வாழ்வின் தடங்கள் - சித்தலிங்கையாவின் தன்வரலாறு
வாழ்வின் தடங்கள் சித்தலிங்கையாவுடைய தன்வரலாற்று
நூலின் இரண்டாவது பகுதி. இதன் முதல் பகுதி
ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் வெளிவந்தது.
இரண்டாவது பகுதியான நூலை மொழிபெயர்த்து முடித்ததும் அதன் கையெழுத்துப் பிரதியை எனக்கு
நெருக்கமான நண்பரிடம் படித்துப் பார்க்கக் கொடுத்திருந்தேன்.
Sunday, 3 September 2017
கதவு திறந்தே இருக்கிறது – ஒரு மானுடப்பறவையின் பயணம்
20.06.1987
அன்று எங்களுக்கு
மகன் பிறந்தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும்
விதமாக என் தோள்பை நிறைய சாக்லெட்டுகளை எடுத்துச் சென்று மருத்துவமனைக் கூடத்தில் இருந்தவர்கள்
அனைவருக்கும் வழங்கினேன். அது ஒரு கொண்டாட்டமான கணம். என் உடலில் முளைத்த ரகசிய இறக்கைகளை
அசைத்தசைத்து திக்குத்திசை புரியாமல் பறந்தபடி இருந்தேன். ஒரு கூடத்தில் தங்கியிருந்த
அனைவருக்கும் கொடுத்த பிறகு, அடுத்தடுத்த கூடங்களில் இருப்பவர்களுக்கும் கொடுத்தால்
என்னவென்று தோன்றியது. மறுகணமே அங்கே நுழைந்து எல்லோருக்கும் சாக்லெட்டுகளை வழங்கிவிட்டுத்
திரும்பினேன். இப்படியே நடந்து நடந்து மருத்துவர்கள் அறைவரைக்கும் சென்றுவிட்டேன்.
எல்லா மருத்துவர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்குப் பேறு பார்த்த மருத்துவர்
மட்டும் காணவில்லை. இருந்தவர்கள் அனைவருமே வாழ்த்துச் சொல்லோடும் புன்னகையோடும் சாக்லெட்டுகளை
எடுத்துக்கொண்டார்கள்.
உருமாற்றத்தின் ரகசியம்- சுகுமாரனின் "அறைவனம்"
பிழைப்புதேடி எங்கள் ஊருக்குள் வருகிறவர்கள் எல்லாம் ஏரிக்கரைக்குப் பக்கத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் கூடாரமடித்து சில நாட்கள் தங்கிச்செல்வதை என் இளமை நாட்களில் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த சுவடு தெரியாமல் புறப்பட்டுப் போய்விடுவார்கள்.
Labels:
அறைவனம்,
சுகுமாரன்,
நவீன தமிழ்க்கவிதை
அன்பைப் பகிர்ந்தளிக்கும் அன்னை- சல்மாவின் "இருட்தேர்"
உன் மகன் எங்கே என்று கேட்ட ஒருவனிடம் அவன் சிங்கம்போல வீரத்துடன் போரிட யுத்தகளத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் அவனைப் பெற்றெடுத்த தன் வயிறு, சிங்கம் தங்கியிருந்து கிளம்பிச் சென்ற குகையைப்போல இருப்பதாகவும் ஒரு தாய் சொல்வதாக புறநானூற்றுப் பாடலொன்றில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. பெற்றெடுப்பதும் சான்றோனாக்குவதும் வேல்வடித்துக்கொடுப்பதும் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடமையை வரையறுத்த சமூகம் உடல்வலிமையும் மனவலிமையும் மிகுந்த இளைஞர்களுக்கு போரிடுவதை கடமையாக வரையறுத்தது.
Labels:
இருட்தேர்,
சல்மா,
நவீன தமிழ்க்கவிதை
Subscribe to:
Posts (Atom)