Home

Saturday, 3 August 2019

திருமண ஆல்பம் - கிரீஷ் கார்னாடின் நாடகம்


திருமண ஆல்பம்




ஒரு சூதாட்டத்துக்குரிய தந்திரங்களோடும் பேராசைகளோடும் இன்று நிகழும் திருமணங்கள் ஏராளம். இரு உள்ளங்கள் இணைந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இனிய தருணத்தை, அவர்களைச் சூழ்ந்து நெருங்கியிருக்கும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளும் சினமும் வன்மங்களும் கசப்புகளும் பொருளற்றதாக ஆக்கிவிடுகின்றன.
திருமணத்தைவிட திருமணத்துக்காக சேர்ந்திருப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமானவையாகக் கருதப்படும் அபத்தங்கள் நிகழ்கின்றன. அவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முன்வைக்கிறது கிரீஷ் கார்னாடின்திருமண ஆல்பம்’. பசுமையான நினைவைத் தூண்டும் நிழற்படங்களின் தொகுப்பாக அமையவேண்டிய திருமண ஆல்பம் நிராசைகள், ஆணவங்கள், பெருமூச்சுகள், ஏமாற்றங்களின் தொகுப்பாக மாறிவிடுகின்றன.


இந்நாடகப்பிரதியை காலச்சுவடு வெளியிட்டுள்ளது.