Home

Saturday, 3 August 2019

அனலில் வேகும் நகரம் - கிரீஷ் கார்னாடின் நாடகம்

அனலில் வேகும் நகரம்




ஒரு நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறைமையையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட்.
செல்வந்தர்கள், ஏழைகள் என்னும் நிலைகளைக் கடந்து கசப்புகள், ஏமாற்றங்கள், தந்திரங்கள், நடிப்புகள் என அனைத்தும் எல்லோருக்கும் ஆழத்தில் உறைந்திருப்பதை நாடகம் சித்தரிக்கிறது. அனலில் கொதியேறும் தண்ணீர்க்குடங்களைப்போல எல்லோருமே ஏதோ ஒன்றைத் தேடியலைந்து நிராசைகளையும் வெறுப்புகளையும் நெருப்பெனச் சுமந்து, அந்த அனலிலேயே வெந்து வெந்து சாம்பலாகிப் போகிறார்கள். ‘இனிது இனிது நகரம் இனிதுஎன்னும் குரலும்கொடிது கொடிது நகரம் கொடிதுஎன்னும் குரலும் இணைந்தே எங்கெங்கும் ஒலிக்கின்றன. தடைகளென இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்க்கிற அரசாங்கச்சட்டத்தைப் போல வாழ்க்கைச்சக்கரம் எல்லோர் மீதும் ஏறி நசுக்கிக் கூழாக்கியபடி ஓடிக்கொண்டே இருக்கிறது.


இந்நாடகப் பிரதியை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது