இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசன இலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆயினும் சிவசிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக விளங்கியது. கல்யாண தேசம் அவர்கள் அனைவருக்கும் இயங்குதளமாக அமைந்தது.