Home

Tuesday 19 May 2015

என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓடும் இறுதியோட்டத்தின் விளைவு அது. வழக்கமாக ஏழு அல்லது ஏழரைக்குள் மாறிவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தொடர்கதை.  வந்ததும் ஒரு குளியல். சிற்றுண்டி. திரும்பிவிடுவேன். இந்த மார்ச் வாரங்களில் அது ஒன்பது அல்லது ஒன்பதரையாக காலையில் படிக்காமல் விட்ட தினசரிகளின் கட்டுரை வாசிப்பு. திரும்பிப் பார்த்தால் சுவர்க்கடிகாரம் பத்தரை அல்லது பதினொன்றைக் காட்டும். ஏப்ரல் பிறந்து நாலைந்து நாட்களில் வழக்கமாக அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் கடந்துபோய்விட்ட நிலையிலும் பரபரப்பு ஓயவில்லை. மனத்தில் வேலையைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு ஓட்டம். எட்டாம் தேதியன்றும் தாமதமாகத் திரும்பி, தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது.
மிதமிஞ்சிய சோர்வில் படுத்த ஐந்து நிமிடங்களுக்குள் உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்தில் திடீரென கைப்பேசி மணி ஒலித்தது. என் மனைவி எடுத்துப் பேசுவதும் பதில் சொல்வதும் அரைமயக்கத்தில் எங்கோ கனவில் கேட்பதுபோலக் கேட்டது. அவள் என் அருகில் வந்து நின்று, தயங்கி நின்றிருக்கும்போதே நான் என் விழிகளைத் திறந்துஎன்ன?” என்று கேட்டேன். அவள் தயங்கிஎழுத்தாளர் ஜெயகாந்தான் செத்துட்டாராம்என்று சொன்னாள். வேகமாக பதறி எழுந்து உட்கார்ந்தேன்.யாரு பேசனாங்க? என்ன சொன்னாங்க?” என்றேன்.சம்பந்தம் சொன்னாருஎன்று பதில் சொன்னாள். நான் உடனே அவர் எண்ணை அழைத்து விசாரித்தேன். அவருக்கு சென்னை நண்பர்கள் செய்தி அனுப்பியதைச் சொல்லிவிட்டுஉங்களுக்கு தெரியுமான்னு கேக்கறதுக்குத்தான் போன் செஞ்சேன்என்றார்.  ”இல்லை, எனக்குத் தெரியாது. நீங்கதான் மொதமொதல்ல சொல்றிங்கஎன்றேன்.



அந்த மரணச்செய்தி எங்கள் இருவருக்குமே கடுமையான துயரமளிப்பதாக இருந்தது. சட்டென்று யாரோ ஒரு பெரிய பாறையை எடுத்து நெஞ்சின்மீது வைத்துவிட்டதுபோல இருந்தது. அந்த எடையை எங்களால் தாங்கவே முடியவில்லை.மகத்தான ஆளுமை. அந்த மாதிரியானவர்களுக்கெல்லாம் மரணமே கிடையாது. தம் எழுத்துகள் வழியாக அவர் இனிமேல் என்றென்றும் நம்முடன் இருப்பார்என்றேன். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம். அத்துடன் அந்த உரையாடலை முடித்துக்கொண்டாலும் அவரைப்பற்றிய நினைவுகள் நெஞ்சில் பொங்கியவண்ணம் இருந்தன.  

எங்கள் பள்ளிக்கூட நாட்களில் ஆண்டுக்கொரு முறை பட்டிமன்றம் நிகழும். ஒருமுறைபரிசுச்சீட்டுகளால் சமுதாயத்துக்கு நன்மையா தீமையாஎன்ற தலைப்பில் நடந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் சம அளவில் கலந்துகொண்டார்கள். அந்தப் பட்டிமன்றத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. பலரும் பரிசுச்சீட்டுகளால் ஏழைகளுக்கு செல்வம் கிடைக்கிறது, அதனால் அது நன்மையே என்னும் கருத்தில் அழுத்தம் கொடுத்துப் பேசினார்கள். அது தீமையே என்னும் அணியின் சார்பில் பேசிய எங்கள் தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் தன் பேச்சின் இடையிடையே ஜெயகாந்தன் என்னும் எழுத்தாளரைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டுப் பேசினார். யாரும் எதிர்பாராத நேரத்தில் தன் கையிலிருந்த ஒரு பழைய ஆனந்த விகடன் இதழைப் பிரித்துஇதோ, நான் படிக்கப்போகிற பகுதி ஜெயகாந்தன் எழுதிய நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோங்கற கதையில இருக்குதுஎன்று சொல்லிவிட்டு மூச்சுவிடாமல் இரண்டு நிமிட நேரம் படித்துக் காட்டினார். ஒரு கணவன் மனைவியிடம் பேசுவதுபோன்ற போக்கில் பரிசுச்சீட்டுத் திட்டத்தைப்பற்றிய கடுமையான விமர்சனமாக, அந்த வரிகள் இருந்தன. அரசாங்கம் சமுதாயத்துக்குச் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சூதாட்டத்தை நடத்துவது பெரும்தீமை, அது நம் சமுதாயத்தை இருளில் தள்ளிவிடும் என்று முழங்கிவிட்டு முடித்துக்கொண்டார். அன்று அவருடைய அணியே வென்றது. ஜெயகாந்தன் என்னும் எழுத்தாளரின் பெயரை அன்றுதான் முதன்முதலில் கேட்டேன். 
நானும் இன்னும் சில நண்பர்களும் ஆசிரியர்களுடைய ஓய்வறைக்குச் சென்றுநீங்க கதையில அங்கங்க கொஞ்சம்தான் படிச்சி காட்டினிங்க. கொஞ்ச நேரம் கொடுத்தா ஒருதரம் முழுசா படிச்சிட்டு தந்துடுவேன்என்று கேட்டோம்.ஜெயகாந்தன படிக்கணுமா? வாங்க வாங்கஎன்று எங்களை மகிழ்ச்சியோடு பக்கத்தில் அழைத்து நிறுத்தினார். மேசைமீது வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து  “இந்தா, நீயே வாய்விட்டு படி. எல்லோரும் கேட்டுக்கட்டும்என்று சொன்னார். நான் உடனே ஒவ்வொரு வரியாகப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப்படிக்க அந்தந்தப் பாத்திரமாகவே மாறிப் போய்விட்டேன். வேத பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர். அவர் யாரிடமும் சம்பளமாக பணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. உஞ்சவிருத்தி செய்து சமைத்து உண்ணும் பழக்கம் கொண்டவர். சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றுக்கொண்டவர். யாரோ ஒரு சிறுவனின் வற்புறுத்தலால் அவர் திண்ணையில் வைத்து பரிசுச்சீட்டின் தீமைகளை நண்பர்களுக்கு எடுத்துரைக்கிறார் அந்த மனைவி ஒரு நாள் ஒரு பரிசுச்சீட்டை வாங்கிவிடுகிறார். அன்றுதான் அவருடைய வீட்டுத் ஆசிரியர். ஐயோ, இவருடைய கொள்கைக்கு எதிராக பரிசுச்சீட்டை வாங்கிவிட்டோமே என்று கலங்குகிறாள் மனைவி. அந்தச் சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்த செய்தியைப் படித்த பிறகு, அவள் கலக்கம் அதிகரிக்கிறது. கணவனிடமே ஆலோசனை கேட்கிறாள் மனைவி. அவர் சிரித்துக்கொண்டே, ‘எனக்கு இதில் விருப்பமில்லை. அந்தச் சீட்டைக் கிழித்துவிடுஎன்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். முடிவெடுக்கத் தெரியாத மனைவியின் புலம்பலும் ஆதங்கமுமாக இருந்தது அந்தக் கதை. 
கதையைப் படித்துமுடித்த பிறகும் அந்த ஆசிரியரின் குரல் ஒலித்தபடி இருப்பதைப்போலவே இருந்தது.என்ன சார், அந்த அம்மா அந்தச் சீட்ட என்ன செஞ்சாங்கன்னு சொல்லவே இல்லயே சார். கதை மொட்டையா நின்னு போயிருக்குதுஎன்று எங்கள் ஐயாவிடம் கேட்டேன். 
அதான்டா ஜெயகாந்தன். என்ன மாதிரியான முடிவை நீ எடுக்கப்போறேங்கறது முக்கியமே இல்லை. அந்த முடிவை நீ எடுக்கறதுக்கு முன்னால, அதுக்கான உண்மையான காரணகாரியங்கள உன் மனசுக்குள்ள உன்னால வகுத்துக்க முடியணும். அதுதான் முக்கியம்என்றார் ஐயா. 
நாங்கள் புரியாமல் அவர் முகத்தையே விழித்தபடி பார்த்தோம். ஐயாவும் அதை உணர்ந்துகொண்டார். ஒன்றிரண்டு கணங்களுக்குப் பிறகு, “இங்க பாருடா, போன வாரம் காந்தி பாடம் நடத்தும்போது என்ன சொன்னேன், ஞாபகம் இருக்குதா? இலக்கு எந்த அளவுக்கு தூய்மையா இருக்கணுமோ, அதே அளவு தூய்மையா அதை அடையக்கூடிய வழிமுறைகளும் இருக்கணும்ங்கறது காந்தி பொன்மொழி. அடையக்கூடிய வழிமுறை பத்தி பேசறாரு காந்தி. யோசிக்கக்கூடிய வழிமுறை பத்தி பேசறாரு ஜெயகாந்தன். அதைத்தான் நாம கவனிக்கணும்என்றார்.

அப்ப அந்த அம்மா பரிச வாங்கியிருக்கமாட்டாங்களா சார்?” நானும் விடாமல் கேட்டபடி இருந்தேன். அந்த வழிமுறை தப்பா சரியான்னு அவங்களால முடிவெடுக்க முடியாமதான, நம்மகிட்ட கேக்கறாங்க. அப்பறம் எப்படி வாங்குவாங்க?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். பிறகு ஐயா தொடர்ந்து, “கதைங்கறது கட்டுரை மாதிரி முன்னுரை, உடலுரை, முடிவுரைன்னு கொண்டிருக்கக்கூடிய ஒரு எழுத்துமுறை கிடையாது. அத முதல்ல புரிஞ்சிக்கணும். கதைய எழுதறவங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் குழப்பமில்லாம  கதைப்போக்குல வெளிப்பட்டிருக்கணும். அதுதான் முக்கியம். அதுல ஜெயகாந்தன் பெரிய மன்னன்.என்று சொன்னார். சார், இது எல்லாமே ஜெயகாந்தன் எழுதின கதைங்களா சார்?” என்று ஐயா கையில் வைத்திருந்த புத்தகத்தைச் சுட்டிக்காட்டி கேட்டேன். ஐயா சிரித்தார்.நான் எட்டு வருஷமா ஜெயகாந்தன் கதைங்கள படிச்சிட்டிருக்கேன். அப்பப்ப பத்திரிகைங்கள்ல வர கதைங்கள மட்டும் கிழிச்சி எடுத்து பைண்டிங் போட்டு வச்சிருக்கேன். எப்ப எனக்கு தோணுமோ அப்ப எடுத்துப் படிப்பேன்என்றார். அந்த பைண்டிங் புத்தகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். நான் அடுத்த கணமேசார், எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கறீங்களா? நாங்களும் படிச்சி பாக்கறோம்என்று கேட்டுவிட்டேன். ஐயாவால் உடனடியாகப் பதில் சொல்லமுடியவில்லை. ஒரு கணம் பதறிவிட்டார். பிறகு மெதுவாக, “ஒன்னு செய்ங்கடா, தெனம் மதியம் சாப்பிட்டப்பறமா இங்க வாங்க. நீ இப்ப படிச்சியே, அந்த மாதிரியே எல்லாருக்கும் படிச்சிக் காட்டு. அது சரியா?” என்றார். ஜெயகாந்தன் எழுத்துகள் எனக்கு இப்படித்தான் அறிமுகமாயின. ஒரே நண்பன், உண்மை சுடும், ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில், சட்டை, சுய தரிசனம், குருபீடம் என அப்போது படித்த கதைகளின் தலைப்புகளெல்லாம் இன்னும் மனத்தில் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும் எங்கள் ஐயாவுடன் நிகழ்த்திய உரையாடல்கள் ஜெயகாந்தனை இன்னும் இன்னும் நெருக்கமாக உணரத் தூண்டின. ஜெயகாந்தனைப்பற்றிப்

பேசுவதென்றால் மணிக்கணக்கில் பேசக்கூடியவர் அவர். கல்லூரிக்கு வந்த பிறகு அவர் படைப்புகளை நானே நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்னைக் கவர்ந்த முக்கியமான படைப்பு. அந்த நாவலின் ஹென்றி என்னைக் கவர்ந்த இலட்சியப் பாத்திரம். ஹென்றியாக படிக்கக்கூடிய ஏழெட்டுப் பேர்கள் இருந்தோம். எல்லோருமே ஜெயகாந்தனை விரும்பிப் வாழ்வது என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. எங்கள் கல்லூரியில் இலக்கியம் அந்தத் தலைப்பின் வசீகரம் இன்றுவரையில் ஒளிகுன்றாமல் இருப்பது மாபெரும் ஆச்சரியம். படித்துவிட்டுப் பேசுவோம். சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை பல முறை படித்தோம். அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் வெளிவந்தது. நாங்கள் அனைவரும் கூட்டமாகச் சென்று நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் அந்த நாவலின் கதையை பார்த்தோம். திரையரங்கில் ஆட்களே இல்லை.எவ்ளோ நல்ல படம், இத பார்க்கறதுக்கு நம்ம ஊருல ஆளில்லாம போயிடுச்சேடாஎன்று படம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்வரைக்கும் புலம்பிக்கொண்டே வந்தான் மனோகரன். ஒருமுறை நானும் நண்பரொருவரும் எங்கள் கிராமத்து ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தோம். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் ரயில்கள் ஒரேஒரு நிமிடம் மட்டும் அங்கே நின்று போகும். மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் அங்கே ஏறுவார்கள். அல்லது இறங்குவார்கள்.  வண்டி வந்து நின்றதும் ஒரு பெரியவர்வறுத்த கடல வறுத்த கடலஎன்று கூவியபடி ஒவ்வொரு ஜன்னலையும் கடந்துபோனார். அந்த ஒரு நிமிடத்தில்  அவரால் பாதி வண்டி தொலைவு கூட போகமுடியவில்லை. வண்டி கிளம்பிவிட்டதும் ஓரமாக ஒதுங்கி வந்து மரத்தடியில் நின்றுவிட்டார். மரத்தடியில் நின்று பேசியபடி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த எனக்கு ஜெயகாந்தனுடைய சிறுகதையொன்று சட்டென்று நினைவுக்கு வந்தது. பக்கத்தில் இருந்த நண்பரிடம் அந்தக் கதையின் மையத்தைச் சொல்லி நினைவிருக்கிறதா என்று கேட்டேன்.மறந்துபோன மாதிரி இருக்குது, ஒருதரம் நீங்க சொல்லுங்க. கேக்கலாம்என்றார். நான் அந்தக் கதையை அவருக்கு விரிவாகச் சொன்னேன். வறுத்த கடலை விற்கும் பெரியவரைப்போன்ற ஒரு பெரியவர்தான் அந்தக் கதையின் முக்கியப் பாத்திரம். ஆண்டு முழுதும் வெறுமையில் மூழ்கியிருக்கும் அவர், ஊரிலிருந்து விடுப்பில் ஆண்டுக்கொரு முறை வந்துபோகும் தன் பேரனின் வருகைக்காக எதிர்பார்த்திருப்பார். அந்தச் சில நாட்கள் மட்டுமே அவருக்கு வசந்த காலம். அதற்குப் பிறகு, அந்த நினைவுகளை மீண்டும்மீண்டும் அசைபோட்டபடி பொழுதை ஓட்டுவார். அவர் வீட்டுக்கருகிலேயே இன்னொரு பேரன் இருப்பான். அவனை அவர் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. அந்த வெளியூர்ப்பேரன் மீதுதான் பாசம் கொண்டிருக்கிறார். வெகுகாலமாக அவர் எதிர்பார்த்திருந்த விடுமுறை மகனுடைய குடும்பம் அவசரமாக திரும்பிச் சென்றுவிடத் திட்டமிட்டுவிட்டதால், பேரனைப் பார்க்க வருகிறது. ஆனால் பேரன் வரவில்லை. பக்கத்தில் இருந்த நகரத்துக்கு வந்திருந்த இயலாமல் போய்விட்டது. ஏமாற்றத்தில் சற்றே நிலைகுலைந்தாலும், சட்டென அவர் மனத்தில் ஒரு மாற்றுத்திட்டம் உருவாகிறது. அதிகாலை வேளையில் தன் கிராமம் வழியாகச் செல்லக்கூடிய அந்த ரயில் நின்று செல்லும் நேரத்தில் அவனைப் பார்க்க உரித்து ஒரு டப்பியில் போட்டு எடுத்துச் செல்கிறார். அவரைப்போலவே விளையாட்டுத் முடிவெடுக்கிறார். பேரனுக்கு ஆசையோடு கொடுப்பதற்காக முந்திரிப்பருப்பை சுட்டு சேர்ந்துகொள்கிறான். இருவரும் சேர்ந்து பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். அந்தத் தோழனைப் பார்க்கமுடியாமல் போன வருத்தத்தில் மூழ்கியிருந்த மற்றொரு பேரனும் அவருடன் தருணங்களின் விளைவாக, அந்தப் பேரனையும் கனிவோடு பார்க்கத் தொடங்குகிறார். இருவரும் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறார்கள். பேரனைப் பார்க்கும் வாய்ப்பு தவறிவிடக்கூடாது என்பதற்காக வண்டி வந்து நின்றதும் ஆளுக்கொரு பக்கத்திலிருந்து பெயர் சொல்லி அழைத்தபடி ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து செல்கிறார்கள். அவருடைய பேரன் அந்த ரயிலிலேயே இல்லை. எதிர்பாராத விதமாக அவர் பேரனுடைய வயதுள்ள வேறொரு சிறுவன் கையிலிருந்த டப்பியையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் அவனிடம் கொடுக்கிறார். அதற்குள் எட்டிப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறான். தாத்தா என்று அழைக்கிறான். அவர் உடனே தன் ரயில் கிளம்பிவிடுகிறது.

கதையைக் கேட்ட நண்பர் சில கணங்கள் ரயில் தண்டவாளங்களையே பார்த்தபடி இருந்தார். அவர் முகம் நெகிழ்ச்சியில் குழைந்திருந்தது. மெதுவான குரலில்மனிதர்களுக்குத் தேவையான ஒரு மாபெரும் உண்மையை சுட்டிக்காட்டுவது தெரியாமல் சுட்டிக்காட்டிவிட்டார் ஜெயகாந்தன். உண்மையிலேயே இது மகத்தான கதைஎன்று சொல்லிவிட்டு சில கணங்கள் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டார். பிறகு அவரே அந்த மெளனத்தைக் கலைத்தபடி, “சொந்தப் பேரன்தான் முக்கியம் என்கிற நிலையிலிருந்து பெரியவருடைய மனம் கொஞ்சம்கொஞ்சமா மாறிட்டே போகுது பார்த்தீங்களா, அங்கதான் ஜெயகாந்தன் நிக்கறாரு. யாவரும் கேளிர்னு சொல்றமாதிரி, இந்த பூமியில் இருக்கும் சிறுவர்கள் எல்லாருமே தனக்கு பேரப்பிள்ளைதான்னு புரிஞ்சிக்கிடற கட்டம் மகத்தான கட்டம்னுதான் சொல்லணும். பெரியவருக்கு ரயில்வே ஸ்டேஷனே போதிமரமாய்டுது. ஜெயகாந்தன் உண்மையிலேயே பெரிய மன்னன்தான். அதுல சந்தேகமே இல்லைஎன்றார்.

ஒரு மகத்தான புரிதலைநோக்கி விரிவதுதான் ஜெயகாந்தன் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். கதையின் பாத்திரம் புரிதலை எட்டும் கணத்தில் வாசகனும் அந்தப் புள்ளியைத் தொட்டுவிடுவான். அந்த இணைபயணம் ஜெயகாந்தன் சிறுகதைகளை வாசிக்கும்போது கிட்டும் பேரனுபவம் என்றே சொல்லவேண்டும்.

என் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கிய கட்டத்திலேயே அவர் மெல்லமெல்ல எழுதுவதைக் குறைத்திருந்தார். ஆனால் அவருடைய நூல்களனைத்தும் எப்போதும் விற்பனையில் இருந்து வந்தன. தலைமுறைகளைக் கடந்து அவருடைய எழுத்துக்கான வாசகர்கள் உருவாகி வந்தபடி இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் என் நண்பர் முகம்மது அலி. ஜெயகாந்தன் படைப்புகளை ஒன்றுவிடாமல் படித்தவர். தொலைபேசித் துறையில் என்னுடன் பணியாற்றியவர். ஒருநாள் தனியாகவே கிளம்பிச் சென்று சென்னையில் ஜெயகாந்தனைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அலுவலகத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாடு செய்துவிட்டு, அதில் கலந்துகொள்வதற்காக ஜெயகாந்தனை அழைத்துவிட்டு முக்கியப் பொறுப்பில் அவர் இருந்தார். சங்கத்தின் சார்பில் பொங்கல் விழாவொன்றை வந்திருந்தார். அந்த விழாவில் கன்னடப் பார்வையாளர்களிடம் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி, அவருடைய ஒருசில படைப்புகளைப்பற்றி எடுத்துரைக்கும் பொறுப்பை அவர் எனக்குக் கொடுத்திருந்தார். பிறகு ஜெயகாந்தன் பேசினார். பாரதியாரின் பாடலைச் சொல்லி பேசத் தொடங்கிய ஜெயகாந்தன் புதிய சமுதாயத்தின் கனவுகளைப்பற்றி அன்று உட்கார்ந்திருந்தேன். கூட்டம் முடிந்து தேநீர் அருந்தும் வேளையில் நான் கன்னடம் விரிவாகப் பேசினார். அந்த ஆற்றொழுக்கான பேச்சில் நான் மெய்மறந்து கற்றுக்கொண்ட விதத்தைப்பற்றிக் கேட்டார். என் பதிலையும் ஆர்வத்தையும் கேட்டபிறகு, புன்னகையோடு என் தோளில் தட்டிக் கொடுத்தார். ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டதை நினைத்து நான் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்.

அதைத் தொடர்ந்து மேலும் இரண்டுமூன்று முறைகள் அவருடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை மறக்கமுடியாது. இலக்கியச்சிந்தனை அமைப்பு என்னுடைய பாய்மரக்கப்பல் நாவலுக்கு சிறந்த நாவல் விருதை அளித்தபோது, அந்த விருதை அளித்தவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை அளித்தபோது, அந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தாளராக கலந்துகொண்டு சிறப்பித்தவர் ஜெயகாந்தன். எனி இந்தியன் பதிப்பகம் வழியாக என்னுடைய துங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுதி வெளியீட்டு நிகழ்ச்சியிலும் முக்கிய விருந்தாளியாக இருந்தவர் ஜெயகாந்தன். அத்தருணங்களில் நான் அடைந்த உவகைக்கு அளவே இல்லை.

அவர் மறைந்துபோன செய்தி கிடைத்த அந்த இரவு முழுதும் அந்தப் பழைய தருணங்களை ஆழ்மனத்திலிருந்து அகழ்ந்தெடுத்து அசைபோட்டபடியே இருந்தேன். திடீரென கவிந்துவிட்ட வெறுமையிலிருந்து மீண்டுவர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இன்று கேட்டுக்கொண்டேன். கடந்த நூற்றாண்டில் பாரதி வழியாக நமக்குக் கிடைத்த முற்போக்கு ஜெயகாந்தன் நமக்கு என்னவாக எஞ்சி நிற்கிறார் என்றொரு கேள்வியை எனக்கு நானே படைப்புகளில் ஓயாமல் ஒலித்தபடி இருக்கும் குரல் அந்த முற்போக்கு இலட்சியவாதத்தின் இலட்சியவாதத்தை அணையாத சுடராக ஒளிரவைத்த முதன்மைப்படைப்பாளி ஜெயகாந்தன். அவர் இருந்தபடியேதான் இருக்கும்.  இலட்சியவாதத்தை உதறிவிட்டு ஒரு சமுதாயம் குரல். நம் மண்ணுக்கு இலட்சியவாதம் தேவைப்படும்வரைக்கும் ஜெயகாந்தனின் தேவையும் வாழ்ந்துவிடமுடியுமா என்ன? ஜெயகாந்தன் நம்முடன் என்றென்றும் இருப்பார்.




(அம்ருதா இதழ் வெளியிட்ட ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)