Home

Tuesday 16 June 2015

மறைந்துபோன வரலாறு

நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில்  பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்கஎன்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போலஎன்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.

உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன? சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக வசூலித்தார்கள். உப்புக்கு வரி போட்டு என்ன சம்பாதித்துவிட முடியும் என்று இப்போது தோன்றலாம். சாதிமத வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோரும் வாங்கிப் பயன்படுத்தும் ஒரு பொருள் உப்பு. ஒருவருக்கு ஒரு வேளைக்கு ஒரே ஒரு கரண்டி உப்பு என்று வைத்துக்கொண்டால்கூட, முப்பதுகோடி பேருக்கு ஒரு வேளைக்கு முப்பதுகோடி கரண்டி உப்பு தேவைப்படுகிறது. ஒரு கரண்டி உப்பு என்பதை ஐந்து மில்லிகிராம் என்று கணக்கு வைத்துக்கொண்டால்கூட ஒரு கோடி பேருக்கு இருநூறு மூட்டை உப்பு தேவைப்படுகிறது. முப்பது கோடி பேருக்கு ஆறாயிரம் மூட்டை. ஒரு மூட்டைக்கு மிகச்சிறிய தொகையை மட்டுமே வரியாக விதித்தாலும் ஆறாயிரம் மூட்டைக்கான வரித்தொகை என்பது மிகப்பெரிய தொகையாகும்.  இது மக்கள் ஒரு வேளை  உட்கொண்ட உப்புக்கான வரிக்கணக்கு. இப்படியே ஒரு நாள் கணக்கு, ஒரு மாதக்கணக்கு, ஓராண்டுக் கணக்கு என கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு மயக்கமே வந்துவிடலாம். இவ்வளவு தொகையா உப்பு வரியாகச் சுரண்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிர்ச்சி ஏற்படலாம்.

 

இந்தத் தொகையின் கவர்ச்சிதான் கட்டாய சுங்க வரியை செயற்படுத்தும் எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்குத் தூண்டியிருக்க வேண்டும். 1782ல் உப்புவரி மூலம் கிடைத்த வருமானம் 29 லட்ச ரூபாய் என்றொரு ஆவணக்குறிப்பில் காணப்படுகிறது. அடுத்த மூன்றே ஆண்டுகளில் 1785ல் அது 62 லட்சமாக இருமடங்காக உயர்ந்துவிட்டது. மூன்று ஆண்டுகளில் இருமடங்காக உயரும் அளவுக்கு வரி வசூலிக்கப்பட்டது என்றால், வேலி அமைக்கப்பட்ட 1869 ஆண்டு காலத்தில் அது எத்தனை மடங்கு உயர்ந்திருக்கவேண்டும் என்பதை நாம் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பல நூறு கோடிகள். இந்த வருமானத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, மேலும்மேலும் அதிகரிக்கச்செய்யவும் வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஈவு இரக்கமின்றி இந்தியாவின் குறுக்கில் கிழக்கு மேற்காக 2500 கி.மீ. தொலைவுக்கு புதர்வேலியை உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் பராமரிப்பதற்கும் காவல் காப்பதற்கும் சம்பளத்துக்கு ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். ஃபீடிங் பாட்டிலைத் திருடிச் சென்ற திருடனைப் போல, உப்புக்கு வரிவிதித்து வசூல் செய்து கொழித்திருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்

வரி வசூலுக்கும் வேலிக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழலாம். நேரடிச் சந்தையைத் தவிர்த்த ஏனைய வழிகளை அடைப்பதற்காகவே வேலி உருவாக்கப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக உப்பைப் பெற அந்தக் காலத்தில் சில வழிகள் இருந்தன.  முதல் வழி அரசின் எல்லைக்கப்பாலிலிருந்து கடத்திவருவது. இரண்டாவது வழி,  மண்டியிலிருந்தோ அல்லது பண்டசாலையிலிருந்தோ திருடுவது. திருட்டுத்தனமான உப்புவரத்தைத் தடைசெய்வதற்காகவே சுங்கப்புதர்வேலி உருவானது.   இரக்கமே இல்லாமல் வரி என்னும் பெயரில் மக்களிடமிருந்து பணத்தை வசூலித்த  உண்மையை உலகத்தின் பார்வைக்கு முதன்முதலாக வைத்திருக்கிறார், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆங்கிலேயரான ராய் மாக்ஸம்.

சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பில் எழுத்து வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகம் ஒரு புதிய முறையில் வரலாற்றை அணுகும் விதத்தை நமக்குச் சொல்லித் தருகிறது. இந்திய வரலாற்றின்மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிற்து. இந்த நூலின் ஆசிரியர், லண்டனில் சாரிங் கிராஸ் சாலை புத்தகநிலையத்தில் 25 பவுண்டு விலைகொடுத்து ஒரு பழைய புத்தகத்தை ஒருநாள் வாங்கியிருக்கிறார். அந்த நூல் பத்தொன்பதான்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பணிபுரிந்த ஸ்லீமன் என்னும் ஓர் ஆங்கிலேய அரசூழியனின் பணிக்கால நினைவுத்தொகுப்பு. பெரும்பாலும் அவர் மேற்கொண்ட பயணங்களைப்பற்றியும் ராஜா ராணிகளைப்பற்றியும் பஞ்சங்களையும் போர்களைப்பற்றியும் மதச்சடங்குகள், சதி சடங்கு, கொள்ளையர்கள், விஷம் கொடுப்பவர்கள், மந்திரவாதிகள் என எல்லாவற்றைப்பற்றியுமான குறிப்புகளால் அந்தப் புத்தகம் நிறைந்திருந்தது. ’இந்தியாவின் போக்குவரத்து வரிகள் மற்றும் அவற்றை வசூலிக்கும் முறைகள்என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் செருக்கும் பேராசையும் நிறைந்த லஞ்சம் வாங்கும் சுங்க அதிகாரிகளின் கதை விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரைக்கு அடிக்குறிப்பாக அவர் இன்னொரு நூலைப்பற்றிய தகவலைச் சேர்த்திருக்கிறார்.

அது ஸ்ட்ராச்சி என்பவர் எழுதிய வேறொரு புத்தகம். அக்குறிப்பில் சில வரிகளில் 1869களில் கிழக்கிந்தியக் கம்பெனியால் சுங்க எல்லையை வகுக்க உருவாக்கப்பட்ட 2300 மைல்கள் நீளமுள்ள ஒரு புதர்வேலியைப்பற்றி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த வேலி சிந்துவிலிருந்து ஒரிசாவில் மகாநதி வரைக்கும் இந்தியாவை இரண்டாகப் பிரித்திருந்தது. ஊடுருவமுடியாத முள்மரங்களால் அந்த வேலி நிறைந்திருந்தது. உப்பு வரியை வசூல் செய்யும் பணியைச் செய்ய 12000 பேர் இந்த வேலியை ஒட்டி நியமிக்கப்பட்டார்கள். மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகு ஸ்ட்ராச்சியின் புத்தகத்தையும் மாக்ஸம் கண்டுபிடித்து படித்துவிடுகிறார்.

 

மனித வரலாற்றின் மிகப்பெரிய கட்டுமானமாகவும் மிகப்பெரிய சுரண்டல் அமைப்பாகவும் இருந்தபோதும் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூலிலும் இந்தத் தகவல் குறிப்பிடப்படவில்லை. பழைய நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற மதமோதல்களைப்பற்றியும் சாதி மோதல்களைப்பற்றியும் உயிரைக் கொடுத்து ஓர் ஆய்வுப் பொருளாகவே கருதவில்லை என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம். இந்தியர்கள் ஆய்வு செய்து தடித்தடியாகப் புத்தகம் எழுதிக் குவிக்கும் எந்த ஆய்வாளர்களும் இதை நிகழ்த்தவேண்டிய வரலாற்றாய்வை, ஓர் ஆங்கிலேயரைத் தூண்டி நிகழ்த்தவைத்திருக்கிறது காலம். காலனிய இந்திய வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் சுரண்டலைப்பற்றியும் உயிர்வேலி கட்டுமானத்தைப்பற்றியும் நேரடிப் பயணங்கள் வழியாகவும் ஆண்டறிக்கைத் தகவல்கள் வழியாகவும் விரிவான ஆய்வை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதை இவர் எழுதுவதற்கு முன்பாக, இந்தியாவில் ஒருவருக்கும் இதைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. கிழக்கிந்திய கம்பெனி காலத்திலும் விக்டோரியா மகாராணியாரின் நேரடி ஆட்சிக் காலத்திலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடுமையான பாதிப்பை சமூகத்தின் கடைத்தட்டில் வாழ்ந்த உப்புமீது விதிக்கப்பட்ட வரிச்சுமையால் மக்கள் பெருமளவில்  மாக்ஸம் குறிப்பிடுகிறார். ஒரு பயணப்புத்தகத்தைப் போலவும் வரலாற்றின் சுவடுகளைத் தலித் சமுதாயத்தினரே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பல இடங்களில் கட்டமைப்பு அமைந்திருக்கிறது. சாவித்துளை வழியாக பார்ப்பதைப்போல, ஆங்கில அரசின் உள்நோக்கங்களையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் அனுபவக்குறிப்புகளைப் போலவும் இந்தப் புத்தகத்தின் ஆட்சிமுறையையும் தன் தேடல் வழியே உய்த்துணரவைக்கிறது.

 

 

இரண்டு தடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அந்தப் புதர்வேலியைக் கண்டுபிடித்துவிடும் முயற்சியைத் தொடங்குகிறார் ராய் மாக்ஸம். இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் 1858 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான காலகட்டம். 1858 வரைக்கும்

 

கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தது. இதற்குப் பிறகு, இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்துவிடுகிறது. அனைத்து அலுவல் துறை ஆவணங்களும் இன்றுவரை இன்னும் பாதுகாக்கப்படுகின்றன என்பது மிகவும் குறிப்பிடவேண்டிய ஒரு செய்தியாகும். ஆவணக்காப்பகத்தை அணுகும் ராய் மாக்ஸம் 1867-70 காலகட்டத்தின் இந்திய உள்நாட்டுச் சுங்கத்துறையின் ஆண்டறிக்கைகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யத் தொடங்குகிறார். ஆண்டறிக்கைகளில் எல்லாத் தகவல்களும் விரவிக்கிடக்கிக்கின்றன. சுங்க எல்லைகள் ஒவ்வொரு முறையும் சீரமைக்கப்பட்ட விதத்தையும் அதற்கான செலவுத்தொகைக் கணக்கையும் அந்தத் தகவல்கள் சொல்லாமல் சொல்லிவிடுகின்றனவேலி ஒரே விதமாக இல்லாமல் காய்ந்த வேலியும் உயிர்வேலியுமாக இணைந்திருந்தது. காய்ந்த வேலி என்பது தரையில் ஊன்றப்பட்டு கம்புகளால் கட்டப்பட்ட இலந்தைக்கிளைகளால் ஆனது. எல்லா கட்டமைக்கமுடியவில்லை. மேலும் கரையான்களும் காட்டுத்தீயும் தொடர்ந்து அவற்றை இடங்களிலும் இந்தப் பொருட்கள் கிடைக்காததால் தொடர்ச்சியாக காய்ந்த வேலியை இடங்களில் உயிர்வேலி அமைக்கப்பட்டது. இதற்காகவே விரைவில் வளர்ந்து பிரம்மாண்டமான அழித்தன. புயலிலும் சூறாவளியிலும் சிக்கியும் சில பகுதிகள் அழிந்தன. எனவே எஞ்சிய தோற்றத்துடன் காணப்படும் கருங்காலி, இந்திய இலந்தை, கிலாக்காய், சப்பாத்திக்கள்ளி  ஆகிய மரங்கள் நெருக்கமாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதற்கான செலவுத்தொகை ஒவ்வொரு ஆண்டறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. வேலியின் அடையாளக்குறிப்பைக்கொண்ட படிக்கப்படிக்க அவருக்கு அந்த உயிர்வேலியை நேருக்குநேர் பார்க்கும் ஆர்வம் பிறக்க இந்திய வரைபடத்தைக்கூட அவர் ஆவணக்காப்பகத்தில் கண்டுபிடித்துவிடுகிறார். அதைப் இந்தியப் பயணத்தைத் திட்டமிடுகிறார்.

 

 

இந்தியப் பயணம் முதலில் அவர் எதிர்பார்ப்பில் ஒரு விழுக்காடு அளவையும் நிறைவேற்றவில்லை. அந்த வேலியைப்பற்றி இந்தியாவில் யாருக்குமே தெரியவில்லை. எந்த இந்திய நூலிலும் அதைப்பற்றிய தகவல் இல்லை. குறைந்தபட்சமாக, வேலியின் எங்கேயாவது எஞ்சியிருக்கச் சாத்தியமான ஒரு துண்டு வேலியைப் பார்த்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் இந்தியாவுக்குள் வருகிறார். அந்தப் பயண அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக எழுதிக்கொண்டு செல்கிறார் ராய் மாக்ஸம்.

 

 

பெரிதாக்கப்பட்ட வரைபடத்தையும் திசைமானியையும் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக அலைகிறார். சில சமயங்களில் திசைமானி குழப்புகிறது. சில இடங்களில் ஆட்கள் குழப்புகிறார்கள். அந்தந்த ஊரில் வசிக்கும் வயது முதிர்ந்த தெரியவில்லை. சிலர் தன் ஊரில் இடிந்து கிடக்கும்  கோட்டையை அவரிடம் காட்டுகிறார்கள். பெரியவர்களை விசாரித்துப் பார்க்கிறார். அவர்கள் ஒருவருக்கும்கூட சரியான தகவல் எந்த இடத்திலும் தன்னை ஓர் ஆங்கிலேயனாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை. எண்ணிக்கொள்ளவும் மனம் சோர்ந்துவிடாமல் மீண்டும்மீண்டும் இடைவிடாது அலைகிறார். இப்பயணங்களில் அவர் இல்லை. இங்கு வசிக்கும் எளிய மனிதர்களில் ஒருவரைப்போலவே ஒவ்வொருவரிடமும் பழகி, எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்துவிடுகிறார். ஒருபுறம் தேடுதலுக்கான முயற்சிகளில் இறங்கியபடியே, வரலாற்றுத்தகவல்களையும் தேடித்தேடி தொகுத்தபடி செல்கிறார் ராய் மாக்ஸம். அவருக்குக் கிடைக்கும் சுங்க ஆணையர்களின் குறிப்புகள் அவருக்குப் பெரிதும் உதவுகின்றன. காங்கிரஸ் முன்னாள் சுங்க ஆணையர் என்பது நகைமுரண் மிகுந்த ஒரு தகவல். வேலியைப் பராமரிப்பது தோற்றத்துக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஆலன் ஆக்டவியன் ஹ்யூம் ஒரு எவ்வளவு கடுமையான செயல் என்பதை 1867-68 ஆண்டுக்குறிப்பில் ஹ்யூம் குறிப்பிட்டிருக்கிறார். சுங்கவேலியைக் கட்டுப்படுத்துவதில் கடைசி ஆணையராகப் பணியாற்றிய டபிள்யூ.எஸ்.ஹால்சேயின் 1877-78 ஆண்டறிக்கையைக்கூட மாக்ஸம் கண்டுபிடித்துவிடுகிறார். வேலி இருந்ததையும் அது தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட்டதையும் நம்புவதற்கான புறச்சான்றுகளாக அவற்றைக் கருதினார் மாக்ஸம்.   சட்டத்துக்கு எதிராக உப்பின் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்த  ஆட்சியாளர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்த 1876-78 காலகட்டத்தில்தான் மதராஸ், பம்பாய் மாகாணங்களிலும் மத்திய இந்தியாவிலும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆண்ட பகுதிகளில் மட்டும் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இறந்துபோனதாக புள்ளிவிவரம் உள்ளது. பஞ்சச்சாவுகள் வெறும் பட்டினிச்சாவுகள் அல்ல. உணவு உற்பத்திக்குறைவாலும் அல்ல. இதே காலகட்டத்தில்தான்  இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு எல்லாத் துறைமுகங்களிலிருந்தும் லண்டனுக்கு கப்பல்கள் சென்றனபட்டினி கிடப்பவர்களுக்கு விநியோகம் செய்ய ஆட்சி நிர்வாகம் நினைக்கவில்லை. கிட்டத்தட்ட அது ஒரு கொலைதான். அடுத்தடுத்த அத்தியாயங்களில் உடலில் உப்புக்குறைபாடுதான் மரணத்துக்கான முக்கியக்காரணமாக இருக்கவேண்டும் என்கிற முடிவை தந்திருக்கிறார் ராய் மாக்ஸம். எல்லாமே உப்பு பயன்படுத்த முடியாத ஏழைகளின் நாம் எட்டுவதற்கு வசதியாக பல அறிவியல் காரணங்களையும் மருத்துவக்காரணங்களையும் மரணங்கள். உப்புப் பற்றாக்குறையின் விளைவுகள் ஆபத்து மிகுந்தவை. உணவுக்குப் பசியைப்போல, நீருக்குத் தாகம்போல உப்புப்பற்றாக்குறையைக் காண்பிக்கும் உடல் உணர்ச்சி என்பது எதுவுமில்லை. எனவே இதை மக்கள் உணர்ந்திருப்பது கடினம். உப்புச்சத்துக் குறைப்பாட்டினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு பிற நோய்கள் காரணமாகச் சொல்லப்பட்டன.

 

பசி உப்பின்மையை மறைத்துவிடும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் உப்பின்மையால்தான் எதிலும் அக்கறையற்றவர்களாகவோ அல்லது திறனற்றவர்களாகவோ அல்லது மோசமான உடல்நிலையுடன் இருக்கிறோம் என்பதையே புரிந்துகொள்ளமுடியாத நிலையில் மரணம் நெருங்கிவிடும். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், தொடர்ச்சியான முயற்சிகளாலும் கடுமையான சட்டங்களாலும் கண்காணிப்பாலும் உப்பு வரி வசூலும் சுங்க வசூலும் முறைமைப்படுத்தப்பட்டுவிட்டனஉப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே நேரடியாக வரி வசூல்செய்யும் முறை தொடங்கிவிட்டது. அநியாய மரணங்களும் ஒருவேளை ஆட்சியாளர்களின் மனசாட்சியைக் குத்தியிருக்கலாம்தானே உருவாக்கிய வேலியை, தானே அழித்தொழிக்கும் முடிவை எடுக்கும் அரசாங்கம், வேலியை முற்றிலும் கைவிட்டுவிடுகிறது. அதன் சுவடுகள் மெல்லமெல்ல இல்லாமலாகின்றன. வேலிக்காக வளர்க்கப்பட்ட மரங்களுடைய வாழ்க்கைக்காலம் அறிவியலின் அடிப்படையில் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் மட்டுமே என்பதையும் மாக்ஸம் ஒரு கட்டத்தில் புரிந்துகொள்கிறார். இந்தக் காரணங்களால்தான் வேலியின் எச்சங்களை தன்னால் காணமுடியவில்லை என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆயினும் எங்கேயாவது உயிர் தப்பியிருக்கும் வேலியின் ஒரு பகுதியை தொடங்குகிறார் அவர். அல்லது ஒரு அடையாளத்தை தன்னால் பார்த்துவிட முடியும் என்னும் நம்பிக்கையோடு அலையத் மூன்று ஆண்டு கால முயற்சிகளுக்குப் பிறகு, மாக்ஸம்  புதர்வேலியின் எச்சத்தைக் கண்டுபிடிப்பதுதான் இந்த நூலின் உச்சம். புதர்வேலியை   ஆங்கிலத்தில்பர்மிட் லைன்என்று ஒரு காலத்தில் சொல்லியிருக்க வேண்டும். அதன் உருது வாய்மொழியின் வடிவமாக . ’பரமத் லயின்என்று மாறிவிட்டது. மாக்ஸமுக்குக் கிடைத்த உருது வரைபடத்திலும் வேலிப்பகுதிக்கு பரமத் லயின் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சகநகர்பலிகர் நகர்களுக்கு இடைப்பட்ட பகுதியைத்தான் அவருடைய திசைகாட்டும் கருவி காட்டுகிறது. ஆனால் அந்தப் பகுதியில் வேலியைப்பற்றிய தகவல்களைச் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை. ஏதோ ஒரு தருணத்தில்தான் அவர் அந்த உருதுச்சொல்லை நினைத்துக்கொண்டு சொன்னதும், அங்கிருந்த முதியவர் ஒருவர் அதை தன்னுடைய இளைய வயதில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அது அழிக்கப்பட்டு சாலை போடப்பட்டுவிட்டது என்று சொல்கிறார். அவர் சுட்டிக்காட்டிய சாலையின் ஓரமாகவே அவர் நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு கிராமத்தை அடைகிறார். அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு பெரியவரும் அந்த வேலியை மீண்டும் ஒரு கிராமம். மீண்டும் ஒரு சந்திப்பு. ஒருவர் தன் கிராமத்தின் எல்லையில் ஒட்டி இந்திரா காந்தி காலத்தில் சாலை போட்டுவிட்டதாகச் சொல்கிறார். மீண்டும் பயணம் உயர்த்தப்பட்ட நிலம் நீண்டதொரு துண்டாகத் தெரிந்தது. எஞ்சிய பகுதிகளை மக்கள் வேலிக்காக உயர்த்தப்பட்ட நிலத்தின் ஒரு சிறு பகுதி இன்னும் இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுகிறார். அங்கே வேலிக்காக இருபதடி உயரத்துக்கு ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். 2500 மைல்கள் நீளத்துக்கு ஒரு காலத்தில் நீண்டிருந்த உயிர்வேலியை, நூற்றி ஐம்பது  ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறிய துண்டு நிலமாக அவர் பார்க்கிறார். அந்தத் துண்டு நிலத்தின் பிரும்மாண்டமான உயரத்தைக் கொண்டு, வேலியின் தோற்றம் எப்படி இருந்திருக்கும் என்பதை அவரால் ஊகித்துக்கொள்ள முடிகிறது. தன்னிடம் இருக்கும்  திசைகாட்டியின் உதவியுடன், அந்த இடம் எவ்வளவு துல்லியமாக வரைபடத்தில்  குறிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து அவர் மகிழ்ச்சியடைகிறார். சில நூறு அடிகளுக்குப் பிறகு, அந்த இடம் சிறுத்துத் தேய்ந்து பள்ளத்தில் இறங்கியது. பின்னர் பரே, சகநகர் சாலையில் சென்று முடிந்தது. அதற்குப் பிறகு வேலியின் பாதை முற்றிலும் அழிந்திருந்தது.

 

 

அந்த வேலியை ஆங்கிலேய அடக்குமுறையின் அசுரமுகம் என்று குறிப்பிடுகிறார் மாக்ஸம். நூலைப் படித்துமுடித்ததும் பல கேள்விகள் எழுகின்றன. நம் வரலாற்று ஆய்வாளர்களால் ஏன் இந்த ஆய்வை நிகழ்த்த முடியவில்லை என்பது ஒரு கேள்வி. மாக்ஸம் எழுதிய நூல் வெளிவந்து 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்கூட இந்த வேலியின் அமைப்புபற்றியோ அல்லது வேலியை நிறுவிய அரசின் நோக்கம்பற்றியோ இந்திய ஊடகத்தில் ஏன் சின்ன அளவில் கூட ஒரு சலசலப்பு உருவாகவில்லை என்பது இன்னொரு கேள்வி. தெரியாத சமயத்தில் அதைப்பற்றிப் பேசவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். தெரிந்த நிலையிலும்கூட மெளனம் சாதிக்கும் அளவுக்கு எந்தச் சக்தி நம்மைத் தடுக்கிறது என்பது இன்னொரு கேள்வி. இப்படி நினைத்துக்கொள்ளும் வேளையில் நம்மோடு வாழ்பவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தபடி உள்ளன. ஆட்சி அடக்குமுறையைவிட அறிவு அடக்குமுறை

செலுத்தும் வன்முறை கொடுமையானது. நம் கண்களைத் திறந்த மாக்ஸமை நன்றியோ வேதனையாகவும் இருக்கிறதுதமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் மிகமுக்கியமானதாகும். இதைப் படித்துமுடித்ததும் காந்தியை இன்னும் நெருக்கமாகஉணரமுடிகிறது. உப்பை முனைத்து காந்தி தொடங்கிய தண்டி யாத்திரையும் உப்புசத்தியாக்கிரகம் போராட்டமும் ஏன் தொடங்கப்பட்டன என்பதற்கான விரிவான பதிலை இந்த நூல் வழங்கிவிடுகிறது. உப்பு ஒரு குறியீடாகவும்  சுங்கவேலியைத் தேடும் மாக்ஸமின் பயணம் ஒரு சமூகவியல் ஆவணமாக மாறும் ரசவாதத்தை இந்தப் புத்தக வாசிப்பு வழங்குகிறது.

 

 (உப்புவேலி- ராய் மாக்ஸம். தமிழில் சிறில் அலெக்ஸ். எழுத்து  

வெளியீடு, ஜோன்ஸ்புரம், முதல் தெரு, பசுமலை, மதுரை- 4. விலை. ரூ.240)

 

(எழுபத்தைந்து இதழாக வெளிவந்திருக்கும் மலைகள்.காம் இணைய இதழின் மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை)