வீரமுத்துவின் கண்கள் எங்கோ மறைந்துநின்றபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற எண்ணத்தை ஒரு நம்பிக்கைபோல ஐம்பதாண்டு காலமாக என் மனத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் சட்டென்று என் முன்னால் தோன்றி என் தோளைத் தொட்டு அவன் அழுத்துவான் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து என்னால் ஒரு கணம் கூட விடுபட முடிந்ததில்லை.
Friday, 25 January 2019
Monday, 14 January 2019
Sunday, 13 January 2019
கோடுகள் - கட்டுரை
எனக்காக என் நண்பர் தனது புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்த புத்தகமே வேறு. ”ஒரு நிமிஷம், இதை பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி என்னிடம் கொடுத்த புத்தகமே வேறு. படங்கள் நிறைந்த புத்தகம் என்பதால் ஆர்வத்தில் புரட்டத் தொடங்கினேன்.
மூன்று முகங்கள் - கட்டுரை
பேருந்திலிருந்து இறங்கும்போது நினைவுக்கு வரவில்லை. அருகிலிருந்த வங்கி ஏ.டி.எம்.மில் பணமெடுத்துக்கொண்டு வெளியே வந்தபோதும் நினைவுக்கு வரவில்லை. எதிர்பாராமல் என்னைக் கடந்துபோன தள்ளுவண்டியில் நாவல்பழக்குவியலைப் பார்த்துவிட்டு பொங்கிய ஆசையில் அரைகிலோ வாங்கிக்கொண்டு திரும்பியபோதும் நினைவுக்கு வரவில்லை. அதற்குப் பிறகு நாலைந்து குறுக்குச்சாலைகளைக் கடந்து முன்னும்பின்னுமாக நகர்கிற வாகனங்களின் ஊடே புகுந்து எங்கள் தெருவுக்குள் நுழைந்து நடக்கத் தொடங்கியபோதுதான் சட்டென நினைவுக்கு வந்தது.
Labels:
பாவண்ணன்,
மூன்று முகங்கள்
Subscribe to:
Posts (Atom)