சிறுகதை இலக்கியத்தில்
முக்கியமான இடத்தைப் பெற்றவர் ருசிய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். நாற்பத்துநான்கு
ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர் பல அமரகதைகளையும் முக்கியமான நாடகங்களையும்
படைத்திருக்கிறார். பலசரக்குக்கடை நடத்திவந்த குடும்பத்தில் பிறந்த செகாவ்
மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். மருத்துவராகப் பணிசெய்துகொண்டே படைப்பாளியாகவும் வாழ்ந்து வந்தார். மருத்துவப் படிப்பின் போது செலவுக்காகச் சில
நடைச்சித்திரங்களைப் பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக எழுதிச் சம்பாதித்தார்.
Wednesday, 28 August 2019
பறவைகளின் பயணம் - கட்டுரை
எங்கள் வீட்டிலிருந்து சிறிது
தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது. பெங்களூர் ஐயர்
என்பவருக்குச் சொந்தமான தோட்டம். அதன் மதிலை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்தன.
கொய்யா மரங்கள், கொடுக்காப்புளி
மரங்கள், மாமரங்கள். அவை பழுத்துத் தொங்கும் காலங்களில் தரையில்
விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதற்காகக் காலையில் ஒருமுறையும் மாலையில்
ஒருமுறையும் மதிலைச் சுற்றி வருவோம். சில துடுக்குப் பிள்ளைகள். மதிலோரமாகக்
கற்களை அடுக்கி, அதன்மீது கவனமாக ஏறி, மதிலில்
கால்பதித்து. பிறகு மரங்களுக்குத் தாவிவிடுவார்கள். ஐயரின் பார்வையில்
பட்டுவிட்டால் சரியாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். அவருடைய மகன் எங்கள்
வகுப்புத்தோழன். அது அவருக்கும் தெரியும். அதனால் வசைகள் கடுமையாக இருக்காது.
ஆனால் புத்தி சொல்கிற போக்கில் இருக்கும். “மரத்தில்
தொங்கும் காய்களை யாரும் அடித்துப் பறித்துத் தின்னக் கூடாது. அதற்கு யாருக்குமே
உரிமை இல்லை. மரங்களில் உள்ள பழங்கள் மரங்களை உறைவிடமாகக் கொண்ட உயிரினங்களுக்கு -
குறிப்பாக, பறவைகளுக்குச் சொந்தமானவை. அவற்றால் கொத்தப்பட்டோ
அல்லது தானாகவோ கீழே உதிர்கிற பழங்களைத் தாராளமாக யார் வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.”
Wednesday, 14 August 2019
காலம் முழுதும் கலை - மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: வைக்கம் முகம்மது பஷீர்
மலையாள
இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின்
தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டு ’காலம் முழுதும் கலை’ என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது பகுதியாக, என் மரணக்குறிப்பு என்கிற தலைப்பில் பஷீர் இறுதியாக எழுதிய
கட்டுரைக்குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இதை எழுதியவர்
இ.எம்.அஷ்ரப். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குறிஞ்சிவேலன்.
கருணையும் கவிதையும் - கட்டுரை
தத்துவத்துறையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்வாச்சாரியரின்
பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர் முன்வைத்த துவைதப் பார்வைக்கு மக்களிடையே
பெருத்த வரவேற்பு உருவானது. சைவக் கோட்டையாக உருவெடுத்துவந்த உடுப்பி நகரம் இவரது
துவைதத் தத்தவத்தின் மையமாக வெகுவிரைவில் மாறியது. அந்த நகரில் இவர் ஒரு கண்ணன்
கோயிலை நிறுவினார். துவாரகையிலிருந்து வந்துகொண்டிருந்த கப்பலொன்றிலிருந்து மால்பே
அருகில் அவருக்கு ஒரு கண்ணன் உருவச்சிலை கிடைத்ததாகவும், அதையே
உடுப்பிக்குக் கொண்டுவந்து நிறுவி ஆலயமொன்றை எழுப்பினார் என்றும் சொல்வதுண்டு.
மத்வ இயக்கத்தை அவரையடுத்துத் தோன்றிய சீடர்கள் கர்நாடகம் முழுதும் பரப்பினார்கள்.
கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையிலுள்ள பண்டரிப்பூர் வரைக்கும் இந்த
இயக்கம் விரிவடைந்து வளர்ச்சியுற்றது. அங்கு வாழ்ந்த ஜடதீர்த்தர் என்பவர் அந்த
வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.
Labels:
உடுப்பி,
துவைதம்,
புரந்தரதாசர்,
ஜடதீர்த்தர்
Saturday, 3 August 2019
இரண்டு கவிதைகள்
ஆறுதல்
அந்தப் பனி சுமந்து வரும் போர்வையை
ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்
மலை குன்று நீர்வீழ்ச்சியிலிருந்து
போர்வையின் நுனியைப் பற்றி இழுத்து வருகிறது
கடல் காடு ஆறு பாலைவனம் தாண்டி
நீண்டு வருகிறது அதன் பயணம்
திருமண ஆல்பம் - கிரீஷ் கார்னாடின் நாடகம்
திருமண ஆல்பம்
ஒரு சூதாட்டத்துக்குரிய தந்திரங்களோடும் பேராசைகளோடும் இன்று நிகழும் திருமணங்கள் ஏராளம். இரு உள்ளங்கள் இணைந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இனிய தருணத்தை, அவர்களைச் சூழ்ந்து நெருங்கியிருக்கும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளும் சினமும் வன்மங்களும் கசப்புகளும் பொருளற்றதாக ஆக்கிவிடுகின்றன.
Subscribe to:
Posts (Atom)