இரு
ஆண்டுகளுக்கு முன்பாக கேதம்பாடி
ஜத்தப்பா ரை என்னும்
கன்னட எழுத்தாளர் மறைந்துபோனார்.
துளு, கன்னடம் என
இரு மொழிகளிலும் தேர்ச்சி
மிக்கவர் அவர். துளு
மொழிக்கான ஓர் அகராதியை
பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் உருவாக்கியபோது,
ஆறாம் வகுப்பு மட்டுமே
படித்திருந்த அவரையும் பக்கத்திலேயே
வைத்துக்கொண்டே உருவாக்கினார்கள். புழக்கத்திலிருந்து மறியத் தொடங்கிய
பல சொற்களை அவர்
தன் நினைவிலிருந்தே எடுத்துச்
சொன்னார். அந்த அளவுக்கு
மொழியில் தோய்ந்தவர். 1916ல்
பிறந்த அவர் இன்னும்
சில மாதங்கள் வாழ்ந்திருந்தால் நூறாண்டு கண்ட
எழுத்தாளராக விளங்கியிருப்பார். சாகித்திய
அகாதெமி நிறுவனத்தின் தலைவராக
யு.ஆர்.அனந்தமூர்த்தி
பதவி வகித்த காலத்தில்
அவருக்கு பாஷா சம்மான்
விருதை அளித்து கெளரவித்தார்.
அந்த விருதை அவருடைய
வீட்டுக்கே சென்று வழங்கி
விழா கொண்டாடினார் அனந்தமூர்த்தி.
முப்பதாண்டுகளுக்கு முன்பாக
தற்செயலான ஒரு தருணத்தில்தான் நான் அவரைப்பற்றி
அறிந்துகொண்டேன். அது ஒரு
சுவாரசியமான கதை.