பார்வையாளர்கள் நேரம் தொடங்குகிற நாலரை மணிக்கு வெளியே வருகிற
முத்துசாமி அண்ணனிடமிருந்து பொறுப்பை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. நான் அதற்கு முன்பாகவே மருத்துவமனைக்குப் போய்விட்டேன். ஷேர் ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டிலிருந்து ஜி.எச்.வரைக்கும் நடந்தே வந்ததில் பத்து ரூபாய் செலவு மிச்சம். நேற்றும் இப்படித்தான் செய்தேன். ஆனால் ஜி.எச். வந்து சேர சற்றே தாமதமாகிவிட்டது. பஸ் பிடித்த நேரத்தில் ஏதோ தப்பு நடந்துவிட்டது. நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும் கூட வாசலில் கோபத்தோடு காத்திருந்த முத்துசாமி அண்ணனுக்கு நம்பிக்கை வரவில்லை. பொறுப்பில்லாமல் தாமதமாக வந்து நிற்பதாகவே குற்றம் சொன்னார்.
Thursday, 22 November 2018
Tuesday, 20 November 2018
இளம்பருவத்துச் சித்திரங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயரின் தன்வரலாற்றிலிருந்து சில பகுதிகள்
நகரத்தில் விடுதியில் தங்கிப் படிக்கிறான் ஒரு கிராமத்து ஏழைச் சிறுவன். சில பணக்காரப்பிள்ளைகளும் அவனோடு சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களைப்போல புத்தாடைகள் உடுத்திக்கொண்டு நடப்பதையோ,
விடுதிக்கு வெளியே சென்று செலவு செய்து சாப்பிடுவதையோ அவனால் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடிவதில்லை. கிராமத்தில் அவனுடைய அம்மா மட்டும் வசிக்கிறார்.
அவனுடைய அப்பா சிலோனில் ஏதோ வேலை செய்கிறார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நெருக்கமான பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது. ஊருக்கு வரும் சமயங்களில் கூட அப்பா
வேறொரு வீட்டில் தங்கிக்கொள்கிறார்.
ஆனால் சிறுவனுடைய படிப்புச்செலவுக்கு அவர்தான் பணம் அனுப்புகிறார்.
அக்காலத்தில் சிலோனிலிருந்து பணம் அனுப்பவதற்கு ஏராளமான அரசுக்கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு
மாதத்துக்கு அறுபது ரூபாய் மட்டும் அனுப்புவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.
அதனால் சிறுவனுக்கு அறுபது ரூபாய்மட்டும் அனுப்பிவைக்கிறார்.
பள்ளிக்கட்டணம் நாற்பது ரூபாய். எஞ்சிய இருபது ரூபாயைக் கொண்டு அவன் மற்ற செலவுகளைச் சமாளித்துக்கொள்கிறான்.
Saturday, 10 November 2018
ரசனைக்குரிய ரசவாதம்
’இங்கா’
தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி ஒரு நிரூபணம். சிறுவர்கள் வாய்ப்பேச்சிலும் விளையாட்டிலும் பயன்படுத்தி மகிழும் பல சொற்களை நல்ல தாளக்கட்டோடு தம் பாடல்களில் பயன்படுத்திக்கொள்கிறார் செந்தில்பாலா.
Labels:
இங்கா,
சிறுவர் இலக்கியம்,
செந்தில் பாலா,
வவ்வவ்வ
தங்கப்பா: சில பழைய நினைவுகள்
புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் நான் கணிதப்பிரிவில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் தங்கப்பா. அப்போது செய்யுள், உரைநடை, நவீன இலக்கியம், துணைப்பாடம், கட்டுரை என நாலைந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு தனித்தனியாகப் பாடங்கள் நடந்தன. தங்கப்பா எங்களுக்குச் செய்யுள் பாடம் நடத்தினார். வகுப்பில் அறிமுகமாகி நன்கு பழகிய பின்னர் தமிழ்த்துறைக்குச் சென்று அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசினேன். நான் அவ்வப்போது எழுதும் கவிதைகளை அவரிடம் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் அவற்றைப்பற்றிக் கருத்துரைக்கவேண்டும் என விரும்பினேன். அவர் தன் எண்ணங்களைச் சொல்வதோடு மட்டுமன்றி, கவிதைகள் மேம்படும் விதத்தில் சில திருத்தங்களையும் சொன்னார். பெரும்பாலும் சந்தநயம் பிசகும் இடங்களுக்குப் பொருத்தமாக ஒரு சொல்லை மாற்றி இன்னொரு சொல்லை அமைத்துக் கொடுத்தார்.
Labels:
சங்கு,
தங்கப்பா,
மரபுக்கவிதை
Subscribe to:
Posts (Atom)