Home

Sunday, 11 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 5 (பகுதி - 1)

 

குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 5 (பகுதி 2)


“என்ன, சீக்கிரம் சொல்லு” என்று அவசரப்படுத்தினார் ராஜா.

“எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

கலங்கரை விளக்கம்

  

எங்கள் வீட்டுக்கு அருகில் அழகானதொரு ஏரி இருக்கிறது. ஏரியை ஒட்டி நடப்பதற்கு ஏற்ற வகையில் செப்பனிடப்பட்ட நீண்ட நடைபாதையில் நடப்பது இன்பமளிக்கும் அனுபவம்.

Sunday, 4 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 4

 

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர் கனகவல்லி. இளையவன் ஆண்குழந்தை. பெயர் கனகராஜா. இருவருமே பெற்றோர்களின் செல்லப்பிள்ளைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் வளர்ந்து கல்வி கற்கும் பருவத்தை அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியரொருவர் அரண்மனைக்கே வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

கவித்துவம் என்னும் ரசவாதம்

  

ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்னும் தலைப்பில் சின்னஞ்சிறியதொரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவை கதைகள் என தலைப்பிடப்பட்டிருந்த போதும், கவித்துவப்புள்ளியை மையமாகக் கொண்டு சற்றே தளர்வான வடிவத்தில் எழுதி இணைக்கப்பட்ட கவிதைகளாகவே தோற்றமளிக்கின்றன. பெரும்பாலான குறுங்கதைகள், கவிதைக்குரிய கூர்மையான வாசிப்பையும் மறைந்திருக்கும் உள்ளடுக்குகளை அசைபோட்டுப் பிரித்துத் துய்ப்பதற்கான பொழுதையும் கோருபவையாக இருக்கின்றன. குறுங்கதை வடிவத்துக்கு அவை கூடுதல் அழகையே அளிக்கின்றன.