சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகத்தாங்கிகளில் படிந்திருக்கும் ஒட்டடையையும் தூசையும் துடைத்து, புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கிவைக்கும் வேலை பகுதிபகுதியாக நடந்துகொண்டிருந்தது. அதனால் பல நாட்களாக அந்தப் பக்கமாக செல்லவே இல்லை. போன வாரம் சென்றிருந்தபோது தூய்மைப்படுத்தும் வேலை முற்றிலும் முடிந்து நூலகமே புதுக்கோலத்தில் காட்சியளித்தது. எல்லாத் தாங்கிகளும் பளிச்சென்றிருந்தன.
எழுத்தாளர்களுடைய பெயர்களின் அகரவரிசைப்படி புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.