Home

Showing posts with label மனைமங்கலம். Show all posts
Showing posts with label மனைமங்கலம். Show all posts

Monday, 2 November 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 18

 

இயற்கையின் புதிர்கள் 

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி, ராஜாஜி, நீதிபதி மகாராஜன், அ.சீனிவாசராகவன், தொ.மு.பாஸ்கரத்தொண்டமான் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர். கல்கியின்  மறைவுக்குப் பிறகு இரண்டாண்டு காலம் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.