Home

Monday, 2 November 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 18

 

இயற்கையின் புதிர்கள் 

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி, ராஜாஜி, நீதிபதி மகாராஜன், அ.சீனிவாசராகவன், தொ.மு.பாஸ்கரத்தொண்டமான் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர். கல்கியின்  மறைவுக்குப் பிறகு இரண்டாண்டு காலம் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அறிவியலின் அருந்துணை

 

சிறார்களுக்கு மாயாஜாலக் கதைகள் எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அதே அளவுக்கு அறிவியல் கதைகளும் பிடித்தமானவை. அதற்கு முக்கியமான காரணம், இருவகைக் கதைகளிலும் அவர்களை வியப்பிலாழ்த்தி, கற்பனையைத் தூண்டும் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.